பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் கலந்துகொள்ளும் விவாதம் என்றாலே இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, அதாவது எதிர் தரப்பை நேரடியாக நிற்கவைத்து ஒரே மேடையில் வரலாற்று தரவுகள் மூலம் அவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாமல் எதிர் தரப்பு திணறி வருகிறது.
கடந்த வாரம் விசிக தலைவர் திருமாவளவன், பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசனிடம் சிக்கி சிதைந்தார் அம்பேத்கர் குறித்து பேச பாஜகவிற்கு என்ன அருகதை இருக்கிறது என திருமாவளவன் பேசியதற்கு மேடையில் தரவுகளுடன் பதில் கொடுத்தார் பேராசிரியர், அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் கடும் வைரலான நிலையில் தற்போது சிக்கியவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ்.
தனியார் ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதம் நிகழ்ச்சி ஒன்றில் கடந்த சட்டமன்ற கூட்ட தொடரின் தொடக்கத்தில் ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வாசகம் இடம்பெறாத காரணத்தால் தமிழகம் தலை நிமிர்ந்ததாக பேசினார் ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
யார் இந்த கருத்தை சொன்னது தமிழகத்தை சேர்ந்த செண்பகராமன் பிள்ளை என குறிப்பிட்டார், ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் இல்லை இல்லை முதலில் ஜெய் ஹிந்த் என முழங்கியது இஸ்லாமியர், நீங்கள் அவர்களுக்கு அங்கீகாரம் செல்ல கூடாது என்பதற்காக மாற்றியுள்ளீர்கள் என கூற உடனடியாக பதில் கொடுத்தார் பேராசிரியர்.
ஏன் 50 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தது நீங்கள் தானே ஏன் அப்போதெல்லாம் அவர்கள் பெயரை முன்னிலைபடுத்தவில்லை என பேராசிரியர் கேட்க வாயடைத்து போய்விட்டார் பீட்டர் அல்போன்ஸ் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விவாதம் என்று வந்தால் பேராசிரியர் கொடுக்கும் அடியில் வாயடைத்து போய் விடுகின்றனர் எதிர் தரப்பினர்.இப்படி அடி அடியென அடித்தால் எப்படித்தான் அடுத்த விவாதத்தில் உங்களுடன் விவாதம் செய்ய வருவார்கள் என பாஜகவினர் கிண்டல் அடித்து வருகின்றனர்.