சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷின் முன்னாள் மனைவியும் ஆவார். இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீப காலத்திற்கு முன்பு இருவரும் தற்பொழுது பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சௌந்தர்யா மற்றும் தனுஷ் இருவரும் தன் சினிமா பயணத்தில் அதிக ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர். அதன்படி தனுஷ் தன்னுடைய படப்பிடிப்புகளில் படி பிசியாக இருந்து வருகிறார் அதேபோன்று சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிடவுள்ளார் இந்த படம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது அதில் சூப்பர் ஸ்டார் மற்றும் அவரது மனைவி, மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா, யாத்ரா லிங்கா என்ற அவரது இரு பேரன்கள் கலந்து கொண்டனர் மேலும் இயக்குனர் நெல்சன் கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தை பற்றியும் சினிமாவில் தான் பட்ட கஷ்டங்கள் பட்டியும் மனம் திறந்து பேசியது தற்போது பரபரப்பாக வெளியாகி உள்ளது. அதாவது என் தந்தை 35 ஆண்டுகளாக நடித்து தனக்கென்று ஒரு பெயரை திரையுலகில் சம்பாதித்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். அதில் களங்கத்தை ஏற்படுத்துவதற்கு எந்த மகளுக்கும் உரிமை இல்லை! என்றும் லால் சலாம் திரைப்படத்தின் கதை பிடித்திருந்தால் மட்டுமே அவர் இதில் நடிக்க ஒத்துக் கொண்டார். அதோடு இந்த திரையுலகில் பெண்களாய் இருந்தால் படம் தரவே மாட்டாங்க பெரிய ஆளா இருந்தாலும் பணம் தர மாட்டாங்க புது முகங்களுக்கு கூட படம் தருவாங்க ஆனா எங்களுக்கு படம் தர மாட்டாங்க இதெல்லாம் இங்கே இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் தெரியும்! என்று பேசினார். மேலும் என்னப்பா இதை செய்ய வேண்டும் என்று ஒரு அவசியமே இல்லை ஆனால் இந்த படத்தின் கதை மிகவும் பிடித்திருந்ததால் அந்த கதைக்காக மட்டுமே அப்பா இதில் நடிப்பதற்கு சம்மதித்தார்.
அதோடு என் அப்பா சங்கி கிடையாது ஒருவேளை அவர் சங்கியாக இருந்திருந்தால் இந்த படத்தில் அவர் நடிக்க ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்! மனித நேயம் கொண்ட ஒருவரால் மட்டுமே இந்த படத்தில் நடிக்க முடியும் என அனல் பறக்கும் வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது தந்தை குறித்தும் அரசியலில் எதிரொலித்து வரும் ஒரு கருத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசி இருந்தார்.ஆனால் அதுவே தற்பொழுது மற்ற விமர்சனங்களின் தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது, அதாவது ஐஸ்வர்யாவின் இந்த பேச்சால் பாஜகவை ஆதரித்து வரும் ரஜினி ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே திமுகவை நம்பி சென்ற குறிப்பாக பெரியார், ஈவெரா போன்றவர்களை நம்பி சென்றவர்கள் எல்லாம் அங்கிருந்து திரும்பிவிட்டனர், ஆனால் தற்பொழுது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தை சங்கி கிடையாது என்று பேசியதால் தேவையில்லாமல் ரஜினிக்கு தான் இழுக்கு என கூறியுள்ளனர். அதோடு, இந்த இசை நிகழ்ச்சி முடிந்த அன்றைய தினமே இப்படி எல்லாம் பேசக்கூடாது என சூப்பர் ஸ்டார் தன் மகள் ஐஸ்வர்யாவிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஐஸ்வர்யா இப்படி அதிகப்பிரசங்கித்தனமாக பேசியதால்தான் தனுஷ் வாழாமல் விட்டு சென்றார் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.