செந்தில்பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் செந்திபாலாஜிக்காக போராடும் வேளையில் வருமானவரித்துறை கரூரில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ள விவகாரம் ஒட்டுமொத்த செந்தில்பாலாஜி கும்பலை கதறவிட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் போக்குவரத்துக் கழகத்தில் அமைச்சராக இருந்து கொண்டு பண மோசடி செய்த வழக்கில் அமலாக்க துறை நடவடிக்கை எடுத்த பிறகு செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு அவரை கைது செய்ய முற்பட்டது, கைது செய்யும் சமயம் அமலாக்கத்துறை தரப்பில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது, இருப்பினும் அதை செந்தில் வாங்க மறுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
பிறகு தனக்கு நெஞ்சு வலி என்று கூறியதால் அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டு பிறகு அவரது மனைவியின் கோரிக்கையை ஏற்று காவிரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். தற்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு இன்றும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் ஆனாலும் நீதிமன்ற காவலில் தற்போது இருந்து வருகிறார். அதன் தொடர்புடைய விசாரணையை இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை முதன்மை நீதிபதி அல்லி காணொளி வாயிலாக மேற்கொண்டு அவரது நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்களுக்கு நீடித்துள்ளார். செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலிருந்து வெளியேற்றி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த திமுக தரப்பிற்கு ஏமாற்றம் அளிக்கும் வகையிலே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதாவது செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததற்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசின் சார்பில் ஜென்ரல் துஷார் மேத்தா மற்றும் செந்தில் பாலாஜியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல் ஆஜரானர். முதலில் ஆஜரான துஷார் மேத்தா செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவிற்கு எதிராக வாதங்களை முன் வைத்தார், அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடக்கப்பட்டு வருகிறது, மேலும் செந்தில் பாலாஜி உடல் நலம் குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து துஷார் மேத்தா செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்த நாட்களை கழித்த பிறகே 15 நாட்களை கணக்கிட வேண்டும் என நீதிமன்ற உத்தர விட வேண்டும் என்றும் கோரிக்கையை முன் வைத்தார். இருதரப்பு வாதங்களின் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை முடிந்த பிறகு இந்த வழக்கு மீதான விசாரணையை ஜூலை நான்காம் தேதி ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர்.
இதற்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை அதிரடியான வாதங்களை முன்வைத்து செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவதற்கான தகுந்த ஆதாரமாக ஒரு ஸ்கிரீன்ஷாட்டையும் சமர்ப்பித்துள்ளது. பிறகு இதற்கான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இப்படி திடுக்கிடும் சம்பவங்கள் செந்தில் பாலாஜி வழக்கில் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அசோக்கின் மாமியாரிடம் கரூர் பைபாஸ் நிலத்தை விற்பனை செய்தவரிடமிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆவணங்களை பெற்றுள்ளதாகவும், சிட்டி யூனியன் வங்கிக்கு அவர் திருப்பிச் செலுத்திய 30 கோடி ரூபாய் கடனை செந்தில்பாலாஜி கொடுத்ததாக அவர் ஒப்புக்கொண்டார் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் செந்தில்பாலாஜிக்கு எதிராக மேலும் ஒரு உறுதியான ஆதாரம் கிடைத்துள்ளது வருமானவரித்துறைக்கு என தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் ஒருபுறம் அமலாக்கத் துறையும் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை சுற்றி வளைத்தது போல் மறுபுறம் வருமானவரித்துறையும் கரூரில் செந்தில்பாலாஜிக்கு எதிராக பல உறுதியான ஆதாரங்களை திரட்டிவிட்டதாகவும் இதிலிருந்து செந்தில்பாலாஜி தப்பிப்பது ரொம்பவும் சிரமம் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.