கடந்த ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி போக்குவரத்து நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மக்களிடம் மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி அதற்கான கடுமையான நடவடிக்கைகளை அமலாக்க துறை எடுத்த சமயத்தில் நெஞ்சுவலி என்று கூறி காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து ஓய்வு நிலையில் இருக்கிறார், தற்போது நீதிமன்ற காவலில் தற்போது செந்தில் பாலாஜி வைக்கப்பட்டுள்ளார். மறுபுறம் அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை காவலில் எடுத்துவிடக்கூடாது என செந்தில்பாலாஜி தரப்பு செந்தில்பாலாஜி மனைவியை வைத்து ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அதனை வைத்து நாட்களை கடத்தியது.
இதுமட்டுமில்லாமல் அமலாக்க துறையின் கட்டுப்பாட்டில் செந்தில்பாலாஜி எப்படியும் சென்றுவிடக்கூடாது என்று செந்தில் பாலாஜியின் தரப்பினர் ஒவ்வொரு வேலையையும் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு இயந்திரத்தனமான காவலில் இருக்கிறார் என்று அவரது மனைவி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தது வேறு செந்தில்பாலாஜி தரப்பிற்கு பின்னடைவாக முடிந்தது, அதற்கான விசாரணை தற்போது நீதிமன்றத்தில் முடிவடைந்து அதன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.
அந்த விசாரணையில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் கைது பற்றி முன்கூட்டிய தெரிவித்ததாக ஒரு ஆதாரத்தையும் கூறி அதற்கான ஸ்க்ரீன் ஷாட்டை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்திருப்பது செந்தில் பாலாஜி தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் இதய அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார், இருப்பினும் நீதிமன்ற காவலில் உள்ளார் அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் செந்தில் பாலாஜியை காணொளி வாயிலாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின் பொழுது நீதிபதி எப்படி இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு செந்தில் பாலாஜி இன்னும் வலி இருப்பதாகவே பதில் அளித்துள்ளார். முன்னதாக செந்தில் பாலாஜியின் தரப்பு எப்படியாவது செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் இருந்தும் அமலாக்க துறையின் விசாரணை இருந்தும் தப்பிக்க வைத்து விட வேண்டும் என்றும் அதிக செலவழித்து வழக்கறிஞரையும் வாதாடுவதற்கு இறக்கியது, இருப்பினும் ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி வைக்கும் படி நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இவ்வளவு செலவழித்து லாயர் வைத்தும் மீண்டும் நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளாரே என செந்தில் பாலாஜியின் தரப்பினர் அப்செட்டில் இருந்து வருகின்றனர். மேலும் இன்னும் 15 நாட்களில் மீண்டும் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை தன் காவலில் எடுக்க இன்னும் அதிரடியாக இறங்கும் எனவும் பல்வேறு தகவல்கள் பல தரப்புகளிடமிருந்து பெறப்படுகிறது.
ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி அமலாக்கத்துறை கொடுத்ததும், மேலும் ஸ்கிரீன் ஷாட், ஆவணங்கள் மற்றும் பணம் வாங்கியதன் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை அமலாக்கத்துறை நீதிமன்றத்திடம் சமர்ப்பித்து செந்தில் பாலாஜியின் தரப்பை பின்னடைவு ஏற்படுத்திய காரணத்தினால்தான் தற்போது அதிக செலவழித்து முகுத் ரோக்கி வழக்கறிஞரை ஏற்பாடு செய்துள்ளது. இதுவே திமுக மற்றும் செந்தில் பாலாஜி தரப்பினருக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது, இந்த நிலையில் நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி ஜூன் 12ஆம் தேதி வரை இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த உத்தரவு அமலாக்கத்துறையிடம் செந்தில் பாலாஜியை மாட்டி விட்டது போன்ற அமைந்துள்ளது என்று கருத்து தெரிவிக்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.