சில ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு தெருக்கள் தோறும் சில தெருநாய்கள் இருக்கும் அந்த நாயை தெருக்களில் உள்ள அனைவரும் சேர்த்து வளர்த்தார்கள் அதன் மூலம் அந்த தெருவில் புதிதாகவும் அல்லது சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய யாரேனும் வந்தால் நான் நமக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து என்ன என்று பார்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உதவி புரியும்! அதுமட்டுமின்றி நம்மிடம் அன்பாக பழகி நம் வீட்டில் ஒருவர் போல ஆகிவிடும். ஆனால் தற்பொழுது சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் உள்ள தெருக்களில் அதிக அளவில் தெரு நாய்கள் திரிந்து வருகிறது. ஒவ்வொரு தெருக்களிலும் கிட்டத்தட்ட ஐந்து நாய்கள் கூட்டமாக திரிவதை பார்க்க முடிகிறது. சரி இத்தனை நாய்கள் இருந்தால் நமக்கு தான் அதிக பாதுகாப்பு என்று நினைத்தால் அதற்கு ஏறுமாறான சம்பவங்களே தற்போது நிகழ்ந்துள்ளது ஏனென்றால் பொதுவாக தெருக்களில் உள்ள நாய்கள் எங்கெங்கு உணவு கிடைக்கிறதோ அங்கெல்லாம் சென்று உண்ணும் பழக்கத்தை கொண்டது இதன் மூலம் ஒரு சில வியாதிகள் அந்த நாய்களை தொற்றக்கூடிய நிலை ஏற்படும் அதுமட்டுமின்றி தொடர்ந்து தெருநாய்களுக்கு தடுப்பூசியும் போடாமல் இருப்பதால் எளிதாகவும் புதிய புதிய வியாதிகள் தொற்றி அது மற்றவர்களுக்கும் பரப்பி விட்டும்!
இது மட்டும் இன்றி தொடர் தடுப்பூசிகள் போடாத காரணத்தினாலும் சில நாய்களுக்கு வெறி பிடித்து யார் என்று பாராமல் வெறியில் அவர்களை விரட்டி கடிக்க ஆரம்பித்து விடும்! இப்படி நாயால் கடிக்கப்பட்டு பலர் மருத்துவமனையில் சமீப காலமாக அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ராயபுரத்தில் 31 பேரை தெரு நாய் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்திலும் அதிராம்பட்டினத்தில் அதிக அளவிலான தெருநாய்கள் சுற்றி வருவதாகவும் இதனால் தெருக்களின் சாதாரணமாக கூட நடக்க முடியவில்லை சிறு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என எல்லாரையும் கடிக்க துரத்துகிறது அது மட்டும் இன்றி சாலைகளில் திடீரென்று ஓடுவதால் விபத்து ஏற்படுவதற்கான அபாயமும் ஏற்படுகிறது என்ற புகார்கள் எழுந்துள்ளது. இருப்பினும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தினால் அதிராம்பட்டினத்தில் வீட்டிற்குள் இருந்த மூன்று வயது குழந்தையை மூன்று தெரு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த பிரச்சனை தமிழகத்தில் மட்டுமல்ல லண்டனில் கூட இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 12 வயது சிறுவனை ஒரு தெரு நாய் மோசமாக தாக்கியதால் அவன் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து உயிர் பிழைத்துள்ளான்! மேலும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அருகே சாதாரணமாக நடந்து கொண்டிருந்த ஒரு சிறுமியை தெருநாய்கள் துரத்தி உள்ளது அருகில் இருந்தவர்கள் துரத்திய நாய்களை விரட்டியதால் அச்சிறுமி தப்பித்துள்ளார். இதற்கு மேலும் அரசு தரப்பில் இது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால்! தெரு நாய்களால் மக்கள் பல தொல்லைகளை சந்திக்க நேரிடும்! முன்பெல்லாம் அரசு தரப்பில் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்வது மற்றும் தெரு நாய்களை பிடித்துக் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் எல்லாம் மேற்கொள்ளப்படும். ஆனால் தற்பொழுது இது போன்ற நடவடிக்கைகள் எதுவுமே நடைபெறுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இப்பொழுது இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளாவிட்டால் இது மேலும் பல சிக்கலை ஏற்படுத்தும் என பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.