24 special

அட என்னடா இது..குடுமிபுடி சண்டை போடுவாங்கன்னு பார்த்தா.. ஒன்னு சேர்ந்துட்டாங்களே! பல்பு வாங்கிய எதிர்க்கட்சிகள்!

Dr.daisi , trichy surya
Dr.daisi , trichy surya

தமிழக பாஜக தேசிய பாஜக வழியை பின்பற்றுகிறது என்று இன்றைய தினம் ஒட்டு மொத்த தமிழக ஊடகங்களும் அறிந்து கொண்ட நாளாக மாறி இருக்கிறது.


தமிழகத்தில் தொடர்ச்சியாக உட்கட்சி விவகாரம் பெரிய அளவில் ஊடகங்களில் முன்னிலை பெற அதை வைத்தே எதிர்க்கட்சிகள் பாஜகவை விமர்சனம் செய்து வந்தனர் பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா மற்றும் சிறுபான்மை மாநில தலைவர் டெய்சி தங்கையா  ஆகிய இருவருக்கும் நடந்த வாக்குவாதம் ஆடியோவாக வெளிவந்த நிலையில் ஊடகங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில் எப்படியும் திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுப்பார்கள் அல்லது நடவடிக்கை எடுக்க மறுத்தால் அண்ணாமலையை அதை வைத்தே விமர்சனம் செய்யலாம் என காத்து இருந்தன ஊடகங்கள், இன்று சூர்யா மற்றும் டெய்சி இருவரும் திருப்பூரில் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் ஆஜராக ஊடகங்கள் திருப்பூர் பாஜக அலுவலகத்தில் குவிந்தனர்.

எப்படியாவது யாரவது ஒருவர் ஏதாவது கட்சிக்கு எதிராக பேசுவார்கள் என காத்து இருந்த ஊடகங்களுக்கு அங்குதான் ட்விஸ்ட் காத்து இருந்தது நேரடியாக டெய்சி மற்றும் சூர்யா இருவரும் ஒன்றாக வெளிவந்து நாங்கள் இருவரும் சமாதானம் ஆகிவிட்டோம் என தெரிவிக்க ஊடகங்களுக்கு அதிர்ச்சி கிடைத்தது.

என்னடா இருவரில் யாராவது ஒருவர் தலைமைக்கு எதிராக பேசுவார்கள் என காத்து இருக்க இருவரும் சமாதானம் ஆகிவிட்டோம் என தெரிவித்தது ஒரு அதிர்ச்சி என்றால் அதைவிட மற்றொரு ட்விஸ்டும் காத்து இருந்தது.

எங்களை பற்றிய செய்தியை வெளியிடுபவர்கள் திமுகவில் நடக்கும் சண்டைகள் குறித்து வெளியிடுவார்களா என திமுகவை நோக்கி ஒரு போடு போட்டனர்.

அவ்வளவுதான் இதுநாள் வரை தமிழகம் பாஜக குறித்து பார்க்காத செய்தியாக மாறி இருக்கிறது. தேசிய பாஜக என்ன முடிவு எடுக்கிறது என இதுவரை எந்த ஊடகங்களும் கண்டுபிடித்தது கிடையாது.குடியரசு தலைவர் வேட்பாளர் தொடங்கி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரை எந்த ஊடகங்களும் கெஸ் செய்தது கிடையாது.

அந்த வகையில்தான் இன்றைய தினம் மாநில பாஜக தலைமையும் சூர்யா சிவா டெய்சி தங்கையா விவகாரத்தில் ஊடகங்கள் முதல் யாரும் கெஸ் செய்ய முடியாத சம்பவமாக மாறி இருக்கிறது. தேசிய தலைமை போன்று மாநில தலைமையும் ட்விஸ்ட் கொடுத்து இருப்பது குரு சிஷ்யன் பாணியில் பாஜகவிற்குள் ஏதாவது நடக்காதா என்று காத்து இருந்த ஊடகங்களுக்கும், எதிர் கட்சிகளுக்கும் பல்பு கொடுத்து இருக்கிறது.