24 special

இப்பவாது அறிவாலயம் முழித்துக் கொள்ளுமா? இல்ல நம்ம ஆட்சி பண்ணா மட்டும் போதும்னு இருக்குமா?

Annamalai, stalin
Annamalai, stalin

திருச்சி சூர்யா டெய்சி செல் போன் உரையாடல் மோதல் விவாகரத்தில் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக மாறி இருக்கிறது, எப்படியும் ஒன்று சூர்யா மீது நடவடிக்கை எடுப்பார்கள் அல்லது சூர்யா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாஜக தங்கள் கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகிக்கு கொடுக்கும் மரியாதை இதுதான் என அரசியல் செய்யலாம் என காத்து இருந்தவர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சி இருக்கிறது.


திருச்சி சூர்யா , டெய்சி சரண் இருவருக்கும் நடந்த உரையாடலில் ஆபாசமாக பேசிய திருச்சி சூர்யா; அண்ணாமலை அதிரடி ரெய்டுக்கு அடிபணிந்து மன்னிப்பு கேட்டது தான்  சோசியல் மீடியாக்களில் இப்போதைய ஹாட் ந்யூஸாக உள்ளது.

தமிழக பாஜக கட்சிகுள்  இருந்து கொண்டு கட்சியின் தலைமை மீது அதிருப்தியை சோசியல் மீடியாக்களில் வெளியிட்ட நடிகை காயத்ரி ரகுராமை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்ததைத் தொடர்ந்து, 

பாஜக சிறுபான்மை பிரிவின் மாநிலத்தலைவி டெய்சி சரன்,  திருச்சி சூர்யா ஆபாசமாக பேசிய ஆடியோ உரையாடல்கள் இரண்டு மூன்று நாட்களாக, பாஜக தொண்டர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் சோசியல் மீடியாக்களில் பேசும் பொருளாகி இருந்தது, இந்நிலையில்  லக்ஷ்மண ரேகையை யார் தாண்டினாலும் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக கூறியிருந்தார். 

மற்ற கட்சிகளைப் போல் வெறும் வாய்  வார்த்தைகளில் சொல்லாமல்  அண்ணாமலை திருச்சி சூர்யாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளார்.நடிகை காயத்திரி ரகுராம் மேல்  அண்ணாமலை எடுத்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து,  மீடியாக்களில் பேசும் பொருளாக இருந்த  திருச்சி சிவாவும் டெய்சி சரணும் இணைந்து திருப்பூரில் ஜாயின்ட் ப்ரெஸ் மீட்டில் 

டெய்சி சரண்,  நாங்கள் இருவரும் பேசிய ஆடியோ க்ளிப்பிங்க் வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. பிஜேபி கட்சியின் சித்தாந்ததில் ஈர்க்கப்பட்டு வந்த பல நல்லவர்கள் கட்சியில் பெண்களை அம்மா அல்லது அக்கா என்று அழைப்பதை தவிர வேறு விதமாய் பேசுவதில்லை. ஆனால் இந்த ஆடியோவினால் வெறும் வாயில அவலை மெல்லும் எதிர்கட்சிகளுக்கு லட்டு கிடைத்தது போல ஆகி விட்டது. எங்கள் இருவரையும் கட்சியை சேர்ந்த கனகசபாபதி அவர்கள் அழைத்து பேச வைத்து எங்கள் இருவருக்குமான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசி ஒரு சின்ன அசம்பாவிதத்திற்காக கட்சியை விட்டுக்கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.  நம்முடைய பாரத பிரதமர் மோடியை போன்ற ஒரு பிரதமரை என் இறப்பிற்கு முன் பார்ப்பேனா? என்று ஏங்கிக்கொண்டு இருந்தேன்.  எங்கள் இருவரின் பிரச்சினையால்  கட்சிக்கும், தலைமைக்கும் களங்கம் விளைவிக்க விரும்பவில்லை.  

நாங்கள் இருவரும் பேசி தீர்த்துக்கொண்டோம். சூர்யாவை தம்பியாகவே அவரை பார்க்கிறேன்” என்று கூறினார். அதை தொடர்ந்து சூர்யாவும்” எங்களை ஒழுங்கு நடவடிக்கை குழுவில் அழைத்ததற்கு எழுத்து பூர்வமாகவும் நேரடியாகவும் நடந்ததை கூறியுள்ளோம்.  மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்கள்  என்ன நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுகிறேன் என்று பிரஸ்மீட்டில் கூறினார். 

இப்படி இருவரும் ஒன்றாக பிரஸ் மீட் கொடுத்து அடுத்த இரண்டு மணி நேரங்களில்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில்” தமிழக பாஜக கட்சியின் சிறுபான்மை அணி தலைவர் திருமதி.டெய்சி அவர்களுக்கும்,ஒபிசி அணியின் தலைவர் திரு.சூரியா சிவா அவர்களுக்கும் இடையே நடந்த ஆடியோ உரையாடல் பொது வெளியில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இந்த சம்பவத்தை விசாரித்து அறிக்கை சமர்பிக்கும்படி கூறியிருந்தேன். அவர்கள் இருவரும் திருப்பூரில் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன் ஆஜராகி இந்த சமபவத்தை பற்றி விளக்கம் அளித்தனர். அதன் பின் செய்தியாளர்கள் முன், இருவரும் நடந்ததை மறந்து விட்டு சுமுகமாக செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.பாரதிய ஜனதா கட்சியில் பெண்களை தெய்வமாக போற்றுகிறோம். பெண்களை இழிவு படுத்துவதை கண்டும் காணாமல் செல்ல மாட்டோம். 

பெண்களை பொது மேடையில் கொச்சைபடுத்துபவர்கள்,  பெண்களை தரக்குறைவாக பேசியவர்கள் , கட்சி கூட்டத்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்கள் போன்றொர் கூடாரமாக திமுக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது” அதுபோல நாங்கள் இருக்க மாட்டோம். என்று காட்டமாக விமரிசித்துள்ள அண்ணாமலை மேலும் அந்த அறிக்கையில்  பெண்களை இழிவுபடுத்துவதை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. என்ன தான் சுமுகமாக செல்கிறோம் என்று சொன்னாலும் இக்கட்சியின் மாநில தலைவராக நான் ஏற்க மறுக்கிறேன்” என்று அழுத்தமாக பதிவிட்டு உள்ளார்.

மேலும் நற்பண்புகளுடன் நூற்றுக்கணக்கான தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். ஒரு மாநில தலைவராக சில கடின முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது” என்று கூறியுள்ள அண்ணாமலை, ஒபிசி மாநில செயலாளர் திரு.சூர்யா சிவா கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த காரணத்தால் அவர் கட்சியின் அத்தனை பொறுப்புகளில் இருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்” என்று  அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். 

திருச்சி சூரியா சாதாரண தொண்டனாக செயல்படுவார்; அவருடைய நடவடிக்கை எனக்கு திருப்தி அளித்தால் ஆறு மாத காலம் கழித்து பதவி அவரை தேடி வரும் என்றும் கூறியுள்ளார். 

தவறு செய்யும் பிள்ளையை கண்டிக்கும் தந்தை போல ,  தவறை திருத்திக்கொண்டால் மீண்டும் பதவி என்பதையும் உறுதிபட அண்ணாமலை கூறியுள்ளது. அண்ணாமலை தன்னை ஒரு நல்ல தலைவன் என்று நிரூபித்து விட்டார் என்று பாஜக தொண்டர்கள் கூறுகின்றனர்.

 மேலும் சமீபத்தில் பெண்களை இழிவு படுத்தி பேசிய திமுக பேச்சாளர்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார் ? வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்.  மேடைக்கு மேடை தாயுள்ளம் கொண்டவன் என்று வேறு பேசியுள்ளார். 

எங்கள் தலைவர் அண்ணாமலையின் அதிரடி நடவடிக்கையை பார்த்தபின்பாவது அறிவாலயம் முழித்துக்கொள்ளுமா? இல்லை, நாங்கள் ஆட்சி நடத்தினால் போதும்; கட்சியில் நடப்பதை கண்டுக்க மாட்டேன் என்று இருப்பாரா ஸ்டாலின்? என்று கேள்வி எழுப்புகின்றனர்?