கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிகப்பிரமாண்டமாக பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் குறித்த செய்திகள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதிலும் பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடை பிரிவு இந்தியாவைச் சேர்ந்த ஒரு மகளிர் வீராங்கனையான வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்த நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது இந்தியா முழுவதுமே பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. இதில் தொடக்க முதலிலே நன்கு சிறப்பான ஆட்டத்தை காட்டி வந்த வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பொழுது வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். அதோடு ஒலிம்பிக் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றிருந்தார். ஆனால் இறுதிப் போட்டிக்கு முன்பாக நடந்த பரிசோதனையில் அவரது எடை 50 கிலோ 100 கிராம் உயர்ந்ததால் ஒலிம்பிக் போட்டியினால் நிராகரிக்கப்பட்டார்.
தொடர்ச்சியாக மூன்று முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற வினேஷ் போகத் இந்த முறை நிச்சயம் பதக்கத்துடன் நாடு திரும்புவார் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது கிட்டத்தட்ட பதக்கத்தை நெருங்கிய நிலையில் அவர் 100 கிராம் எடை வித்தியாசத்தில் பதக்கத்தை தவறவிட்டதோடு தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த ஒலிம்பிக் முழுவதுமே பேசு பொருளாக மாறியது. சிலர் அவருக்கு ஆதரவளிக்கும் வகையில், ஆறுதலாக பேசினாலும் சிலர் ஒரு சிறிய தவறான இவ்வளவு பெரிய பதக்கத்தை விட்டு விட்டீர்கள் என்று தங்கள் வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்று விட்டது.
நான் தோற்று விட்டேன் என்னுடைய உத்வேகம் அனைத்தும் உடைந்து விட்டது என்று தன்னுடன் வலிமை இல்லை என்று ஒட்டுமொத்தமாக மல்யூத்தத்திற்கு குட்பாய் என்று கூறிவிட்டு தனது தோல்வியை ஏற்றுக் கொண்டதோடு ஒட்டு மொத்தமாக விளையாட்டுக்கே எண்டு கார்டு கொடுத்து விட்டார். இவரின் இந்த பதிவும் கடுமையான விமர்சனங்களை பெற்றது ஒரு தோல்விக்காக இப்படி ஒட்டுமொத்தமாக மையூத்தத்தை புறக்கணிப்பதா என்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்ட பொழுது அதனை கண்டு கொள்ளாமல் இருந்த வினேஷ் போகத் தற்பொழுது பாஜகவிற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்து ஹரியானாவில் நடக்க உள்ள பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
அதனால் ஹரியானா மக்களை தன் பக்கம் கவரும் வகையிலான நடவடிக்கைகளில் போகத் இறங்கி உள்ளார் என்பதும் தெரிய வருகிறது. அதாவது ஷம்பு கிராம எல்லையில் ஹரியானா விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் இந்த போராட்டத்தில் கடந்த சனிக்கிழமை கலந்து கொண்ட மல்யுத்த வீராங்கனை போகத், உங்கள் மகள் உங்களுடன் நிற்கிறேன் என்று விவசாயிகளுக்கு ஆதரவாகவும், நம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்காக கடவுளை வேண்டிக் கொள்கிறேன். நம் உரிமைகளை பெற்றுக் கொள்ளாமல் வீடு திரும்பாதீர்கள் என்று போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவர் பேசியுள்ளார்.
இதன் பின்னணியில் வருகின்ற அக்டோபர் மாதத்தில் ஹரியானாவில் சட்டமன்ற தேர்தலில் நடைபெற உள்ளது அதில் விவசாயிகளின் வாக்குகளை கவரும் விதத்தில் இது போன்ற திட்டத்தை வினேஷ் போகத் எடுத்துள்ளார் என்றும் தொடர்ச்சியாக பல விவசாயிகளுக்கு பல உதவிகளை செய்து வருகின்ற பாஜக அரசை ஒரு மல்யுத்த வீராங்கனை கொண்டு எதிர்க்கும் முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளதாகவும் டெல்லி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. முன்னதாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பொழுது, அதற்கான தகுந்த நடவடிக்கைகளையும், விசாரணைகளையும் போகத்திற்காக மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. போகத் ஏற்கனவே அரசியலில் பாஜகவை குறிவைப்பதும், அதற்க்கு பின்னணியில் காங்கிரஸ் இருப்பதும் தற்போது உறுதியாகியுள்ள நிலையில் அடுத்தகட்டமாக போகத் மீது விளையாட்டு கவுன்சில் நடவடிக்கை எடுக்கும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன....