
தமிழகத்தில் அதிமுக கட்சிக்குள் கோஷ்டிபூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், கடந்த சில நாட்களாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மாஜி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ மற்றும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இடையே பனிப்போர் நிலவுகிறது. இதனால், கே.ஏ.செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்காமலும், அவர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமலும் தவிர்த்து வந்தார். அ.தி.மு.க., எம்எல்ஏ கூட்டங்களையும், செங்கோட்டையன் புறக்கணித்து வந்தார். இது அரசியல் வட்டாரங்களில் முரண்பாடு நிலவுவதாக பேச்சை சூடு பிடிக்க செய்தது.
இந்நிலையில், கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து விட்டு சென்னை திரும்பினார். அதே சமயம் செங்கோட்டையன் டெல்லி சென்று, அங்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசிவிட்டு தமிழகம் திரும்பினார் என்ற செய்திகள் வெளிவந்தது.
எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அமித் ஷாவை சந்தித்தார்.
செங்கோட்டையன் டெல்லி சென்ற விவகாரம் அரசியல் வட்டாரங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் டெல்லி
குறித்து ஓமலூரில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில் அந்தியூரில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் செங்கோட்டையன்.சென்னை செல்வதற்காக ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.மௌனம் அனைத்தும் நன்மைக்கே செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பினர். மீண்டும் டெல்லி போகிறீர்களா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு கைகூப்பியபடியே சிரித்தபடி "ஸ்டேஷன் தான வந்திருக்கேன்" எனக் கூறிவிட்டுச் சென்றார் செங்கோட்டையன். "தொடர்ச்சியாக நீங்கள் மௌனமாகவே இருப்பதன் காரணம் என்ன?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், "மௌனம் அனைத்தும் நன்மைக்கே" எனச் சிரித்தபடி கூறிவிட்டுக் கிளம்பினார்.
அதுமட்டுமில்லாமல் எடப்பாடி பழனிச்சாமி மீது பல அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ க்கள் கடுப்பில் தான் உள்ளார்களாம். 2021 சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என பாஜக அட்வைஸ் செய்துள்ளது அனால் அதை கேட்கலாமல் பிரிந்து கிடந்த எடப்பாடி தலைமையிலான
அதிமுக போட்டியிட்டது. அதில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக தென் தமிழ்கத்தில் அதிமுக முழுவதுமா தூக்கி வீசப்பட்டார்கள். அதனை தொடர்ந்து 2024 தேர்தலில் கொங்கு மண்டலத்திலும் தனது செல்வாக்கை இழந்தது அதிமுக.
எடப்பாடி பழனிச்சாமியின் அரசியலுக்காக திமுகவை ஆட்சி கட்டிலில் ஏற்றி தமிழக மக்களுக்கு துரோகம் செய்தது மட்டுமில்லாமல் அதிமுகவில் பல எம்.எல் ஏக்கள் வராமல் இருந்ததற்கு எடப்பாடி தான் காரணம் கடுப்பில் இருந்தவர்கள் அனைவரும் தற்போது செங்கோட்டையன் பின் அணிவகுத்து நிற்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் 2024 ல் அதிமுக தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது தற்போது மீண்டும் தானாகவே உள்ளே வர முயற்சித்து வருகிறது. என்பதே உண்மை இதில் பாஜகவின் வேலைகள் எல்லாம் இல்லை. அதே போல் ஒருங்கிணைந்த அதிமுகவைத்தான் பாஜக விரும்புகிறது.
எனவே எடப்பாடி மீண்டும் திமுக ஆட்சிக்குவர உழைப்பாரா அல்லது ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க முயற்சிப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வராவிட்டால் பாஜக அண்ணாமலையை வைத்து களத்தில் இறங்க ஏற்கனவே இருக்கும் பிளானை அமல்படுத்தும் அதில் பல்வேறு கட்சிகளின் தலைவர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
அதிமுகவுக்கு தான் பாஜகவின் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. மேலும் 2029 ஆம் தேர்தலில் தமிழகத்தில் அச்சாணியாக 2026 ஆம் அன்டு சட்ட பேரவை தேர்தல் அமையும் என கூறுகிறார்கள்.