கடந்த சில வருடங்களாகவே உலக அளவில் ஒரு போர் பதட்டமான சூழ்நிலையை சந்தித்து வருகிற நாடு என்றால் அது உக்கிரன் மற்றும் ரஷ்யா! இந்த இரு நாடுகளும் தொடர்ந்து தங்கள் போரை கைவிடுவதாக தெரியவில்லை இருப்பினும் மற்ற நாடுகள் இவர்களின் போரை கைவிடுவதற்கான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர் ஆனால் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் உக்கரைனின் தாக்குதலுக்கு ரஷ்யாவும் என மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக உக்ரைனுக்கு சென்றார். அங்கு அந்த நாட்டின் அதிபரான ஜெலன்ஸை சந்தித்து போரின் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பிரதமர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்து இந்த இரு நாடுகளின் போரில் இந்தியா எந்த நாடு பக்கமும் நிற்காமல் நடுநிலையாகவும் நிற்காமல் அமைதிப்பக்கமே தொடர்ந்து நின்ற வந்துள்ளது.
இதனால் உலக நாடுகளே ரஷ்யா மற்றும் உக்கிரன் இடையே ஏற்பட்டுள்ள போரில் இந்தியாவின் ஆதரவு யாருக்கு இந்தியா எந்த பக்கம் நிற்கிறது என்பதை தொடர்ந்து பார்த்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்பொழுது பிரதமர் உக்ரைனுக்கு சென்று அதிபரிடம் போர் நிறுத்துவது குறித்து பேசி உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி உக்ரைனுக்கு பிரதமர் செல்வதற்கு முன்பாக ஆறு வாரங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபரை சந்தித்துள்ளார் என்பதும் உலக அளவில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியும், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலம் மட்டுமே மோதலுக்கு தீர்வு காண முடியும் என்பதை இந்தியாவின் நிலைப்பாடு! உக்கரேனும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும், அதன் மூலம் மோதலுக்கான தீர்வை காண வேண்டும் என்றும் அமைதிக்கான முயற்சிகளில் முனைப்பான பங்களிப்புகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி தான் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டு வந்தது குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது பற்றி தனது சமூக வலைதள பக்கத்திலும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் பயணத்திற்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜோபைடன் இந்திய பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் பேசியதாக தெரிவித்துள்ளார். அதாவது பிரதமர் மோடியின் சமீபத்திய போலந்து மற்றும் உக்கரின் பயணத்தை பற்றி விவாதிக்க நான் அவருடன் தொலைபேசியில் உரையாடினேன். மேலும் உக்கரைனுக்காக அவரின் அமைதி செய்திக்காகவும் மனிதாபிமான ஆதரவுக்காகவும் அவரை பாராட்டினேன் என்று இந்தோ-பசிபிக் பகுதிகளில் அமைதி மற்றும் செழிப்புக்காக இணைந்து பணியாற்றுவதற்கான எங்களது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினோம் என ஜோ பைடன் பேசியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக வெள்ளை மாளிகைக்கு அறிக்கைகள் சென்றுள்ளன. அதுமட்டுமின்றி பிரதமர் உக்ரைன் சென்றது வங்கதேசத்தில் நிலவி வருகின்ற பிரச்சினையையும் பிரதமர் தீர்த்து வைப்பதற்கு வகை செய்யும் என உலகளவில் உள்ள அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எப்படி இருந்தாலும் பிரதமரின் இந்த உக்ரைன் பயணம் அமெரிக்க அதிபர் மாளிகையை ஆட்டம் காண வைத்துள்ளது என்றே கூறப்படுகிறது.