கடந்த 2023 ஆம் ஆண்டின் டிசம்பர் 30-ம் தேதி அன்று சென்னையில் புதிதாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதனை அடுத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் மற்றும் கோயம்பேட்டில் இருந்து தென் தமிழகத்திற்கு சென்று வந்த பேருந்துகள் அனைத்தும் இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என்றும் வெளியூரிலிருந்து சென்னைக்கு திரும்புபவர்கள் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே இறக்கி விடப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது, இது சென்னை பகுதி மக்கள் மட்டுமின்றி சென்னையிலிருந்து வெளியூருக்கு செல்லும் மக்களுக்கும் அசோகரத்தை ஏற்படுத்தியது ஏனென்றால் கோயம்பேடு சென்னை மாநகரின் முக்கிய மற்றும் நடுப்பகுதியில் அமைந்திருந்ததால் சென்னை முழுவதும் இருந்த மக்கள் அனைவரும் எளிதாகவும் குறைந்த நேரத்தில் வந்து செல்வதற்கு ஏதுவாக கோயம்பேடு அமைந்திருந்தது ஆனால் கிளாம்பாக்கம் என்பது வண்டலூரைத் தாண்டி உள்ள பேருந்து நிலையம் என்பதால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாவது பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அனைவரும் அதிருப்தி தெரிவித்தனர்.
ஆனால் தமிழக அரசு, அரசு போக்குவரத்து பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் தொடங்கும் என்றும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால் இதனை மறுத்த ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் கிளாம்பாகத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க தங்களுக்கு அவகாசம் வேண்டும் என்றும் கூறினார், அதற்கு தமிழக அரசு ஜனவரி 24ஆம் தேதிக்கு பிறகு சென்னை நகருக்குள் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்ற கூடாது என்றும் இதை மீறினால் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்தது. இதனால் ஆம்னி பேருந்துகளில் செல்வதற்காக புக்கிங் செய்திருந்த மக்கள் அனைவரும் குழப்பத்திற்கு உள்ளாக்கப்பட்டனர் மேலும் இதனால் எங்களது முழு பயணமே தாமதம் ஆகிவிடுகிறது என்று மக்கள் தங்கள் அசோகரியத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர் அன்பழகன் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது, கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது நாங்கள் அரசு கூறுகளை ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் அங்கு வெறும் 144 பேருந்து நிறுத்தங்கள் மட்டுமே உள்ளது ஆனால் எங்களிடமோ ஆயிரம் பேருந்துகள் உள்ளது அப்படி இருக்கும் பொழுது நாங்கள் எங்கள் பேருந்துகளை எப்படி அங்கு நிறுத்துவோம்! எங்களுக்கு பேருந்து நிறுத்துவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுங்கள் என்று நாங்கள் அரசிடம் நேரடியாகவும் பத்திரிகையாளர்கள் மூலமாகவும் தெரிவித்து கொள்கிறோம். ஆனால் இதுவரையும் அரசு தரப்பில் எந்த ஒரு வசதி செய்து தரவில்லை எதுவும் கூறப்படவில்லை! இதனை அடுத்து அமைச்சர் சேகர்பாபு உடனடியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார் ஆனால் அந்த உத்தரவும் எங்களுக்கு அறிக்கையாக கொடுக்கப்படவில்லை!
கிட்டத்தட்ட நான்கு நாட்கள் விடுமுறையை கணக்கிட்டு பயணிகள் அனைவரும் முன்பதிவு செய்து இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் நாங்கள் எப்படி இந்த நேரத்தில் அனைத்தையும் மாற்றுவது எங்களுக்கு அவகாசம் கேட்டாலும் அதை அரசு தராமல் உடனடியாக இதனை செய்ய வேண்டும் என்று அவசரப்படுத்துகிறது என குற்றம் சாட்டினார்! இப்படி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து மக்கள் மத்தியிலும் போக்குவரத்து சங்கங்கள் மற்றும் உரிமையாளர்கள் மத்தியிலும் இந்த விவகாரம் திமுகவிற்கு பெறும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.மேலும் இதுகுறித்துஅரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறும்போது, தற்பொழுது கோயம்பேடு பேருந்துநிலையம் இருக்கும் இடத்தை லூலூ மால் கட்ட திமுக அரசு திட்டமிட்டுள்ளது அதன் காரணமாகத்தான் இங்கிருந்து அவசர அவசரமாக பேருந்து நிலையத்தை காலி செய்துள்ளது என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.