
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக 39 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்றது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மிக முக்கிய தேர்தலாகவும் பெரும்பாலான தேசிய அரசியல்வாதிகளின் கண்ணும் தமிழகத்தின் மீதுதான் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி தனது ஆட்சிப் பொறுப்பை ஸ்தாபித்து வந்த தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாஜகவின் செல்வாக்கானது அதிகரித்து வருவதையும் அதன் மூலம் பாஜகவின் வாக்கு வங்கி மற்ற தென் மாநிலங்களை விட கணிசமான அளவிலான வளர்ச்சியை தமிழகத்தில் கண்டது என்பதும் அரசியல் வட்டாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது, இதற்காகவே 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் பாஜகவிற்கு ஒரு முக்கிய தேர்தல் ஆகவும் பாஜகவின் வாக்கு வங்கி எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை மற்ற அனைத்து கட்சிகளுக்கும் எடுத்துக்காட்டுகின்ற தேர்தலாகவும் பார்க்கப்பட்டது.
எப்படி இந்த வாக்கு வங்கியானது தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களில் உயர்ந்தது என்று பார்க்கும் பொழுது அதற்கு முக்கிய காரணமாக அம் மாநிலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்கப்பட்டது கூறப்படுகிறது.ஏனென்றால் இதற்கு முன்பாக அவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாகவும் இருந்து தனது கனவின் மூலம் கிடைத்த பணியை விட்டுவிட்டு மக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் பாரதிய ஜனதா கட்சி என்ற ஒரு தேசிய கட்சியில் இணைந்து தமிழகத்தில் தான் பிறந்த ஒரு மாநிலத்தில் நல்ல மாற்றத்தை மக்களுக்கு ஊழலற்ற ஆட்சியை வழங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு அரசியலுக்கு வந்ததாக அவர் தெரிவித்ததும் தமிழக மக்களிடையேயும் இளைஞர்கள் மத்தியிலும் தனிக்கவனம் பெற்றது.
அதற்குப் பிறகு அவர் தமிழக அரசியலில் முன்வைத்த ஒவ்வொரு கருத்துக்களும் பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜகவையும் எதிர்க்கட்சிகளாக முகத்தை திருப்பிக் கொண்ட பலரது கவனத்தையும் பாஜக பக்கமும் பிரதம நரேந்திர மோடி பக்கமும் திரும்ப முக்கிய காரணமாக அமைந்தது. அதுமட்டுமின்றி லோக்சபா தேர்தலுக்காக 2021 ஆம் ஆண்டிலிருந்து தனது வேலைகளை படுவேகமாகவும் துரிதமாகவும் தமிழக பாஜக முன்னெடுத்தது. இதற்கிடையில் தமிழகம் முழுவதும் அண்ணாமலை ஏழை எளிய மக்களையும் சாமானிய மக்களையும் நேரடியாக சென்று சந்தித்து வந்த என் மண் என் மக்கள் நடை பயணம் தமிழக மக்களிடையே நிச்சயமாக மாற்றத்திற்கான ஆட்சி தமிழகத்தில் வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்தியது.
அதோடு தேர்தல் அறிவிப்புகள் வெளியான பிறகு பிரச்சாரத்திற்காக ஆயிட்டமாகி வந்த பாஜக திறம்பட தனது பிரச்சாரத்தை ஒவ்வொரு பகுதியிலும் நடத்தி முடித்தது. மேலும் தேர்தலும் விறுவிறுப்பாக ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. இதனை அடுத்து அடுத்த கட்ட தேர்தல்கள் மற்ற மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் அடுத்தடுத்த நடைபெற உள்ளது. மேலும் வருகின்ற மே ஏழாம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழகத்தைச் சேர்ந்த பல பாஜகவினர் வட மாநிலங்களுக்கு சென்று பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், கோவையில் மாவட்ட பாஜக நிர்வாகிகளை அழைத்து அண்ணாமலை நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்றையும் நடத்தி இருக்கிறார் அதில் தேர்தல் பணிக்கான தனது நன்றியை தெரிவித்ததோடு சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் 500 நாட்கள் தான் உள்ளது அதனால் விறுவிறுப்பாக அதற்கான பணிகளை நாம் தொடங்க வேண்டும் என தனது கட்சி தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த தேர்தலில் நடந்த சில தவறுகள் மற்றும் தாமதங்கள் கூட சட்டமன்ற தேர்தலில் ஏற்படக்கூடாது அதற்காக நாம் வீக்காக இருப்பதிலும் கவனம் செலுத்தி அதை வலிமை படுத்த வேண்டும் எனவும் அண்ணாமலை அட்வைஸ் கொடுத்துள்ளார். ஏற்கனவே லோக்சபா தேர்தலுக்காக மற்ற அனைத்து கட்சிகளையும் விட முன்கூட்டியே தேர்தல் பணிகளை தொடங்கி தற்போது சிறப்பாக தேர்தலையும் பாஜக தன் தரப்பில் முடித்துள்ளது. இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கான ரிசல்ட் இன்னும் வெளிவராத பொழுது சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக பாஜகவினரை ஆயத்தமாக அண்ணாமலை கூறியது மற்ற கட்சிகள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.