
நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் திரையுலகில் நடன கலைஞராக அறிமுகமாகி தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நடிப்பு மட்டுமின்றி ஏழை எளிய குழந்தைகளுக்கு நல்லது செய்து வருகிறார் லாரன்ஸ். அந்த வகையில், தற்போது புதியதாக அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார் நடிகர் ராகவா லாரென்ஸ்.
தான் நடிக்கும் படங்களில் மாற்று திறனாளிக்கு என்று ஒரு பாடலை உருவாக்கி அதில், நடனமாட செய்துள்ளார். இவர் தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் ராகவா லாரன்ஸ் மாற்று திறனாளி மற்றும் ஏழை குழைந்தைகளுக்கு உதவிகளை செய்து வந்தவர் மக்களிடமும் ராகவா லாரென்ஸ் என்றால் அனைவருக்கும் தெரிந்த முகமாக அறிமுகமானார். சமீபத்தில் இவர் KPY பாலாவுடன் இணைந்து குழந்தைகளுக்கு உதவிகளை செய்து வந்தார் அது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியிட்டார் kpy பாலா.
அதேபோல் கை கொடுக்கும் கை அமைப்பை நடத்தி வருகிறார் இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு 14 இருசக்கர வாகனங்களை வாங்கி கொடுத்திருந்தார். அது போல் இந்த அமைப்பில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் திரைதுறை உள்ளிட்ட துறையில் சாதித்து வருகின்றனர். அதேபோல், தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் சாகச கலை காலை நிகழ்விலும் அசதி வருகின்றனர். உதவி மனப்பானம் கொண்ட லாரென்ஸ், இன்று விவசாயிகளுக்கும் நல்ல செய்தியை கொடுத்துள்ளார்.
மே தினத்தின் முதல் நாளான இன்று மாற்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறார். முன்னதாக இளைஞர்களுக்கு உதவி செய்வதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு நடிகர் எஸ்.ஜே சூர்யா, kpy பாலா, அறந்தாங்கி நிஷா என்று பலர் நாங்கள் இந்த அமைப்பில் சேர்ந்து இருக்கிறோம் என்று கூறியிருந்தனர். எஸ்.ஜே சூர்யாவும் வெளியிட்ட வீடியோவில் மாற்றம் கட்டளையில் இணைந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக அறிவித்தார். மே ஒன்று மாஸ்டர் யாரை காண்பித்து உதவி செய்ய சொன்னாலும் நான் செய்வேன். ஃபார் மை பாய் சீசர்" என்று ஜிகர்தண்டா படத்தில் வசனத்தையும் பேசிய வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இன்று மாற்றம் அறக்கட்டளையின் மூலம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கின்றனர். அதில் அறக்கட்டளை மூலம் ல கிராமங்களுக்கு சென்று கஷ்டப்படும் விவசாயிகளுக்கு முதல் கட்டமாக தன் கையாலேயே 10 டிராக்டர் வழங்கப் போவதாக தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோவிற்கு அதிகமான லைக்குகள் குவிந்து வருகிறது. ஏற்கனவே இந்த மாற்றம் என்று அமைப்பில் இணைந்த நடிகர் பாலா தான் பலருக்கு உதவி செய்து கொண்டு இருந்தாலும் இப்போது லாரன்ஸ் மாஸ்டரோடு உதவி செய்வது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. நட்சத்திரங்கள் பலரும் இணைவதால் மாற்றம் கட்டளை மூலம் மக்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.