பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை இலங்கை செல்ல இருக்கும் தகவல் வெளியாகி இருக்கும் சூழலில் யாத்திரை தேதியை மாற்றிவிட்டு அண்ணாமலை அவசரமாக இலங்கை செல்ல காரணம் என்ன என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு விடை கிடைத்தது.தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை தேர்வான பின்பு கடந்த ஆண்டு ஏப்ரல், 30ல் இலங்கை சென்றார். மே மாதம் முதல் வாரம் வரை அங்கிருந்த அவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நடந்த, மே தின கொண்டாடட்டத்தில் பங்கேற்றதுடன், அங்கு வசிக்கும் தமிழர்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
அவர் நாடு திரும்பியதும், இலங்கை தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்பான அறிக்கையை, மத்திய அரசிடம் சமர்ப்பித்தார். அண்ணாமலையின் இந்த நடவடிக்கைக்கு, இலங்கை தமிழர்களிடம் வரவேற்பு கிடைத்தது.இலங்கைக்கு தமிழர்கள் இடம் பெயர்ந்து, 200 ஆண்டுகளாகிறது. இதை முன்னிட்டு, இலங்கை அரசின் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சகம் சார்பில், 'நாம் 200 - ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்' என்ற நிகழ்ச்சி, வரும் 2ம் தேதி கொழும்பில் உள்ள சுகதடாச உள்அரங்கில் நடக்கிறது.இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, அந்நாட்டு அரசு அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதில் பங்கேற்க, நாளை அண்ணாமலை இலங்கை செல்கிறார்.
தமிழகத்தில் திமுக அதிமுக விசிக மதிமுக என பல அரசியல் கட்சிக்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் தொடர்ச்சியாக பேசி வந்து இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் யாரும் நேரடியாக இலங்கை சென்று இலங்கை தமிழர்களை சந்திக்க முயன்றது கிடையாது அதே நேரத்தில் தற்போது தமிழக மக்கள் மட்டுமின்றி இலங்கை தமிழர்களும் பாஜக மீதும் குறிப்பாக 10 ஆண்டு பாஜக ஆட்சியில் இலங்கை தமிழர்களுக்கு பிரதமர் மோடி செய்த நல திட்டங்கள் அடிப்படையில் இலங்கை தமிழர்கள் இந்தியா பக்கம் திரும்பி இருப்பதன் காரணமாக அண்ணாமலை இலங்கை செல்கிறாராம்.தமிழகத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இலங்கை தமிழர்களும் தமிழ் அமைப்புகளும் அண்ணாமலையை கருதுவதால் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய அண்ணாமலையை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.