முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை அதிமுகவில் இருந்து நீக்கிய நிலையில் எடப்பாடி பசும்பொன் சொல்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்தில் இருக்கும் உருவ சிலைக்கு தங்க கவசத்தை அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். வருடம் வருடம் தங்க கவசத்தை பொருத்தப்பட்டு அதன் பின் வங்கியில் வைக்கப்படும்.இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவில் இருந்து ஓ. பன்னீர் செல்வம் நீக்கப்பட்டதை அடுத்து அந்த கவசத்தை யாரிடம் ஒப்படைப்பது குறித்து உச்ச நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பிடம் ஒப்படைக்கப்படுள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்கை பெற முன்னணி கட்சிகள் தீவிரம் காட்டி வருவதால் தென் மாவட்ட அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அதன் படி எடப்பாடி பழனிசாமி இந்த குரு பூஜையில் கலந்துகொள்வது உறுதியான நிலையில் தென் மாவட்டங்களில் அரசியல் நேரத்தில் மாற்றம் ஏற்படும் என்று தெரிகிறது.இதற்கிடையில் கடந்த வருடம் தேவர் ஜெயந்தி பூஜையில் ஸ்டாலின் பங்கேற்காத நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி பங்கேற்பதாக அறிவித்ததும், முதலமைச்சர் ஸ்டாலின் இந்த வருடம் பங்கேற்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
30ம் தேதி குரு பூஜை நடைபெற உள்ள நிலையில், முன்னதாக மத்திய பாஜக அமைச்சர்கள் பங்கேற்பதாக அறிவித்திருந்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரை தொடங்கியதும், அங்கு மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்திருந்தனர். எனவே நாடாளுமன்ற தேர்தலில் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.அதிமுக கட்சியில் இருந்து தேவர் சமுதாயத்தை சேர்ந்த சசிகலா, ஓபிஎஸ், டிடிவி ஆகியோரை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கியதால், ஏற்கனவே மதுரையில் பொன்விழா மாநாடு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவர் சமுதாய இயக்கங்கள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தின.
இப்போது, அவர் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கே நேரடியாக செல்லவிருக்கும் நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்க முக்குலத்தோர் இயக்கங்கள் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த மாதம் நடக்கக்கூடிய தேவர் பூஜையில் ஓபிஎஸ்-டிடிவி-சசிகலா ஆகியோர் ஓன்றிணைந்து பங்கேற்பதால் மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்றும் இவர்கள் பாஜகவுடனான கூட்டணியில் கூடிய விரைவில் இணையுள்ளதால் பாஜகவிற்கு இந்த முக்குலத்தோர் வாக்குகள் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. எடப்பாடி ஓபிஎஸ்ஷை எப்போதும் இணைத்து கொள்ளமாட்டேன் என்றும் டிடிவி தினகரனும் எடப்பாடி பக்கம் செல்லமாட்டேன் என்று தெரிவித்தது எல்லாம் பார்க்கும்போது எடப்பாடி பழனிசாமிக்கு இவையெல்லாம் தேர்தலில் அவருக்கு அங்கு பெரும் அடி விழும் என்று கூறப்படுகிறது.