
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு கூலி வேலைக்கு சென்றவர். இது வரை வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது அவருடைய மகள் ரேகா பன்னிரண்டாம் வகுப்பு முடித்து குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் என்பவர் வீட்டில் வீட்டு வேலைக்காக சேர்ந்துள்ளார். அவரை கல்லுரியில் படிக்க வைப்பதாக 7 மாதத்திற்கு முன்பாக ஆன்டோ மதிவாணன் பெண்ணின் அம்மாவிடம் கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரேகாவை அழைத்து சென்ற நாளில் இருந்து தொடர்ந்து வீட்டில் உள்ள எம்எல்ஏவின் பேரக்குழந்தை அழும்போதெல்லாம் ரேகாவை அவரது மகன் மற்றும் மருமகள்கள் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், இதுமட்டுமல்லாமல் உடலின் பல இடங்களில் சிகரெட்டால் எம்எல்ஏ மகன் சூடு வைத்ததாகவும் அவரது மருமகள் தலை முடியை வெட்டி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, வீட்டில் அடைத்து 7 மாதங்களாக சித்திரவதை செய்துவந்துள்ளதாக ரேகா கூறியுள்ளார். பல முறை ரேகா என்னை விட்டு விடுங்கள் நான் சென்று விடுகிறேன் என்றும் உங்களை குறித்து வெளியில் சொல்ல மாட்டேன் என சொல்லியும் அவரை துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் ரேகா சிகிச்சைக்கு சேர்ந்துந்துள்ளார், இது தொடர்பாக பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல்லாவரம் எம்.எல் ஏவின் மகன் மற்றும் மருமகள் மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம இணையத்தில் வைரலாக திமுக ஆட்சி ஆதிகாரத்தில் தான் அமைச்சர்கள் ஊழலில் ஈடுபடுகின்றனர். கிழே உள்ள எம்எல்ஏக்கள் இது போன்ற சம்பவத்தில் ஈடுபடுகின்றனர் என விமர்சனம் முன்வைக்கின்றனர் அரசியல் விமர்சகர்.
இது தொடர்பாக, செய்தியாளர் ஒருவர் எம்எல்ஏ கருணாநிதியிடம் கேட்கையில், என் மகன் 7 ஆண்டுகளாக அவரது குடும்பத்தோடு தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து முழுமையாக எனக்கு தெரியாது. நான் மக்கள் பணியில் முழுமையாக ஈடுபடுத்தி வருகிறேன். மக்களுக்காக நான் சேவை செய்து வருகிறேன் என பேசியுள்ளார். இந்நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்ட மகன் மற்றும் மருமகள் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பட்டியலின இளைஞர்களுக்கு தொடர்கதையாகவே துயரம் வந்து கோட்னு இருக்கிறது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டை அந்த பெண் வைத்ததும் அவருடை அம்மா கதறி அழுகிறார், இதுவரை பட்டியலின சமுதாயத்திற்க்கு நாங்கள் தான் என்று வலம்வரும் விசிக கட்சி தலைவர் திருமாவளவன் எங்கு இருக்கிறார் அரசியல் நேரத்தில் தான் வெளியில் வருவாரோ என்று விமர்சனம் வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பார்ப்போரை கலங்க செய்துள்ளது.