
பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்திருந்தார். அவரை சென்னையில் நேற்று இரவு ரோடு ஷோவில் பங்கேற்று மக்களை சந்தித்து தாமரை சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை செய்தியாளார்களை சந்தித்து திமுகவினர்க்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தீவிரமாக பிராகாரம் செய்து வருகின்றனர் அரசியல் தலைவர்கள். திமுக, அதிமுக, பாஜக என்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடும் தலைவர்கள் மத்தியில் பாஜக இந்த முறை வெற்றி பெற்று தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு எம்பிக்கள் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்து சென்னையில் ரோடு ஷோ நடத்தினார்.
ரோடுஷாவின் போது பிரதமர் அருகில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் வட சென்னை வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோர் இடம்பெற்றனர். தி. நகர் முதல் பனகல் பூங்காவில் இருந்து சுமார் 2கிமீ வரை வாகன பேரணி நடந்தது. இதில் மக்கள் பாரத பிரதமர் மோடிக்கு திரளாக கலந்து கொன்டு மலர் தூவி ஆதரவு கொடுத்து வரவேர்த்தனர். இந்த சூழ்நிலையில் தென் சென்னையில் போட்டியிடும் வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடந்து முடிந்த ரோடு ஷோவானது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் ரொம்ப உற்சாகமாக இருக்கிறோம். பாரத பிரதமர் வரவேற்பு என்பது மிக பெரிய வெற்றியை தரும்.
முதலமைச்சர் ஸ்டாலின் என்ன தான் விமர்சனம் செய்தாலும், பாரத பிரதமர் மோடியின் வருகை என்பது தமிழகத்திற்கு வர வர அவர்களுக்கு பதற்றத்தை கொடுக்கிறது என கூறினார். பிரதமர் மோடி ரோடு ஷோவில் பங்கேற்ற போது, ஸ்டாலின் மதுரையில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்து வந்தார். தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடியின் வருகை என்பது மக்களின் கவனத்தை பெற்றுள்ளது. மேலும், தென் சென்னையில் திமுக வேட்பாளர் மற்றும் பாஜக வேட்பாளர்கள் இடையே தான் போட்டி என்று கூறி வரும் இந்த சூழ்நிலையில் பிரதமர் சென்னைக்கு வந்தது மேலும் பாஜக வேட்பாளர்களுக்கு கூடுதல் வாக்குகளை பெற்று தரும் என கூறப்படுகிறது. பொதுமக்களும் பிரதமர் மோடியை பார்த்ததில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.
இன்று வேலூர் கோட்டை மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, தர்மபுரி,சிதம்பரம்,உள்ளிட்ட 6 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரை தொடங்கினார். இன்று மாலையே கொங்கு பகுதிக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள உள்ளார். நான்கு நாள் பயணத்தில் தமிழக அரசியலில் களம் மாறும் என தெரிகிறது. இதனால் திமுக நாற்பது தொகுதி என்பதை கூற மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.