இந்திய சினிமாவில் கமலஹாசன் ரஜினிகாந்திற்கு அடுத்து அதிக அளவில் ரசிகர்களே கொண்டுள்ளவர்தான் நடிகர் விஜய்!! இவர் தனது 18 வயதிலிருந்து இருந்தே திரைப்படங்களில் நடித்த தொடங்கி விட்டார். 1992 ஆம் ஆண்டில் தொடங்கி தற்போது வரை திரை உலகில் நடித்துக் கொண்டு வரும் விஜய் சூப்பர் ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்து வந்து அதிக அளவில் ரசிகர்களை பெற்று இன்று மிகவும் பிரபலமான முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். இவரின் திரைப்படம் வெளியாக போகிறது என்று செய்தி வந்தாலே அவரின் ரசிகர்களுக்கு ஒரு பெரிய கொண்டாட்டமாகவே மாறிவிடும். அந்த அளவிற்கு ரசிகர்களில் கூட்டம் இவருக்கு உள்ளது. இப்படி திரையுலகில் தனது நடிப்பினால் அசத்தி வந்த விஜய் தற்போது அரசியலிலும் இறங்கியுள்ளார்.இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே தனது ரசிகர் மன்றத்தை பயன்படுத்தி பல நல்ல விஷயங்களை செய்து வந்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் போன்றவற்றை வழங்குதல், 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து சாதித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கப்படும் பரிசுகள் வழங்குவது போன்ற பல விஷயங்களில் நடிகர் விஜயும் அவரின் ரசிகர்களும் தொடர்ந்து செய்து வந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் 2026 ஆம் ஆண்டு வரப்போகும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதை இலக்காகக் கொண்டு தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்ற பெயரையும் வைத்துள்ளார். ஆனால் அரசியல் கட்சியை அறிவிப்பதற்கும் முன் பல விமர்சனங்களையும் எதிர்கொண்டு வந்தார். விஜய் உடன் சேர்ந்து அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று அவரின் தந்தை நினைத்துக் கொண்டிருந்த சமயம் அதனை எதிர்த்து தனியாக தற்போது அரசியலில் கட்சி ஒன்றினை ஆரம்பித்துள்ளார். இன்று வரையிலும் விஜய் அவரின் தந்தையுடன் பேசி கொள்கிறாரா என்று பார்த்தால் இல்லை என்றே கூறலாம்.
ஆனால் விஜய் எப்போதும் போல் அவரின் தாயிடம் பேசிக் கொண்டுதான் உள்ளார். அவரின் அம்மாவும் விஜயின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தான் உள்ளார்.இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவரின் தாய்க்காக தற்போது ஒரு கோவில் ஒன்றை கட்டியுள்ளார். சமீபத்தில் இவர் ஒரு சாய்பாபா கோவிலில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. அதைப்பற்றி விசாரிக்கும் போது தான் தெரிகிறது அந்த கோவிலேயே விஜய்யோடது தான் என்றும், சென்னையில் உள்ள கொரட்டூரில் எட்டு கிரவுண்ட் நிலத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தனது அம்மா ஷோபாவிற்காக சாய்பாபா கோவில் ஒன்றை தன்னுடைய சொந்த இடத்திலேயே கட்டிக் கொடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த கோவிலின் கும்பாபிஷேகமானது கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தான் நடந்து முடிந்தது என்றும் தகவல்கள் வெளியாகிறது.
இந்த கோவிலை கட்ட ஆரம்பித்த நாளிலிருந்து நடிகர் விஜய் இரவு பொழுதில் வந்து பார்த்து தான் செல்வாராம்!! மேலும் வேலைகள் முடிந்த பிறகு இந்த கோவிலின் கும்பாபிஷேகத்தில் விஜயின் தாய் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் ஆகிய இருவரும் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தாய்க்காக கோவில் கட்டும் சில பேரை பார்த்ததுண்டு ஆனால் தாய் வழிபடுவதற்கென்றே ஒரு கோவில் கட்டி கொடுத்துள்ளார் விஜய் என்று இணையங்களில் பல கமெண்டுகள் எழுந்து வருகிறது. மேலும் அரசியலுக்கு வருவதால் இந்த கோவில் கட்டும் செய்தி நமக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் மக்கள் மனதில் இடம் பிடிக்க எனவும் வேறு விஜய் சில அரசியல் கணக்குகள் வைத்திருப்பதாகவே பேச்சு எழுந்துள்ளது...