Tamilnadu

செய்தியாளர்களிடம் ஆணவ பேச்சு அமைச்சர் பொறுப்பில் இருந்து PTR தியாகராஜன் விரட்டியடிக்கப்படுகிறார்

Ptr thiyagarajan
Ptr thiyagarajan

திமுக அமைச்சர்கள் நாளுக்கு நாள் ஆணவமாக பேசும் பேச்சுக்கள் இணையத்தில் முகம் சுளிக்கும் விதமாக அமைந்துள்ளன, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன்னர் மின் கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள் இனி அவகாசம் வழங்கப்படாது என மிகவும் ஆணவமாக பேசினார் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே மறுநாள் பிரஸ் மீட் நடத்தி மின்கட்டணம் செலுத்தாதவர்கள் இணைப்பு துண்டிக்க படாது என விளக்கம் கொடுத்தார்.


இது ஒருபுறம் என்றால் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் இன்றைய பேச்சு, திமுகவினரையும் முகம் சுழிக்கும் வகையில் அமைந்தது, நிருபர் ஒருவர்  நீட் ரத்து,டாஸ்மாக் மூடல்,விவசாய கடன், கல்வி கடன், நகை கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு,மாதம் ₹1000 ரேஷன் கடையில இதெல்லாம் அறிக்கையில் கொடுத்தீர்கள் எங்கே என கேள்வி எழுப்பினார்.

இதற்கு மிகவும் ஆணவமாக பதில் அளித்த தியாகராஜன் தர்றோம்னு சொன்னோம்!எப்போனு அறிக்கையில் போட்டுருக்கா என கேட்டது கூடியிருந்த நிருபர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, பள்ளிக்கூட குழந்தை போல் நிதி அமைச்சர் ஒருவர் பேசிய பேச்சுக்கள் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது, இதற்கு முன்னரும் நடந்த செய்தியாளர் சந்திப்பு, தொலைக்காட்சி விவாதம் ஆகியவற்றில் ஒருமையில் பேசி தலைமையிடம் சிக்கினார் தியாகராஜன்.

இருப்பினும் இன்றைய தியாகராஜனின் செய்தியாளர் சந்திப்பு முழுக்க முழுக்க அவரின் அனுபவமின்மையை காட்டியுள்ளது என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினிடம் முறையிட்டுள்ளனர், ஸ்டாலின் மருமகன் சபரீசனின் உறவினர் என்ற முறையில் மட்டுமே தியாகராஜனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது என்றும், சரியாக எண்ணி இன்னும் 6 மாதங்களில் PTR தியாகராஜனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு விரட்ட படலாம் என அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.