Tamilnadu

மூடர்களே' நடிகர் சூர்யாவிற்கு நெத்தியடி பதில் கொடுத்த டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணசாமி

Actor surya - shyam krishnasamy
Actor surya - shyam krishnasamy

நடிகர்கள் தங்கள் துறையை காட்டிலும் அரசியல் கருத்துக்கள் பேசுவதும் அதையும் மாணவர்கள் எதிர்காலத்துடன் இணைத்து அவர்களை குழப்புவதும் தமிழகத்தில் தொடர்கதையாக மாறியுள்ளது.


மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டு பல்வேறு விவாதங்களுக்கு இடையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்டு சட்டமாக மாறியுள்ளது, உச்ச நீதிமன்றமும் நீட் செல்லும் என தீர்ப்பு வழங்கி முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

நீட்டிற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதடியது காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சிதம்பரத்தின் மனைவி நளினி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நளினி இனி இந்தியாவில் நீட் தேர்வை யார் நினைத்தாலும் ரத்து செய்ய முடியாது என பேட்டி கொடுத்தது நினைவிருக்கலாம், அந்த அளவிற்கு நீட் தேர்வு முக்கியமானதாக மாறியுள்ளது.

இந்த நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என போலி வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ள திமுக அரசாங்கம் தற்போது நீட் தேர்விற்கு தயாராக தமிழக மாணவர்களை கேட்டு கொண்டுள்ளது, ஆனால் நிலைமை இப்படி இருக்க நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் நீட் பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் குழுவிற்கு அனைவரும் நீட் பாதிப்பு குறித்து எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

இது கடும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது, தமிழக அமைச்சர் நீட் தேர்விற்கு தயாராக கூறுகிறார், நடிகர் சூர்யா நீட் பாதிப்பு என குழுவிற்கு தெரிவிக்க அறிக்கை வெளியிட்டுள்ளார் இதனால் தமிழக அரசியலில் சிக்கி மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக மாறியுள்ளது, இந்நிலையில் நடிகர் சூர்யாவின் அறிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ளார் புதிய தமிழகம் கட்சியின் இளம்தலைவர் டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணசாமி.

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் :-  மாணவர்கள் ஒரு தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் போது, தொடர்ந்து, அது கடினமான தேர்வு, சமூக அநீதி, குறிப்பிட்ட பிரிவினர் தேர்ச்சியே பெற முடியாது என்று அவர்கள் மனதில் அவநம்பிக்கையை விதைக்கும் மூடர்களே, மாணவர்களின் தவரான முடிவுகளுக்கு காரணம்.

இந்த சாபக்கேடு தமிழகத்தில் மட்டுமே..என தெரிவித்துள்ளார்.நீட் தேர்வு குறித்து தவறான தகவலை விதைத்து மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் சம்பவங்களுக்கு மூடர்கள் சிலர் அறிவில்லாமல் பேசும் வார்த்தைகளே காரணம் என அதிரடியாக குறிப்பிட்டுள்ளார் ஷ்யாம், இது சூர்யாவிற்கு மட்டுமல்லாமல் மாணவர்கள் இடையே நீட் குறித்து குழப்பத்தை விளைவிக்கும் அனைவரும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.