
மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் நிர்வாகியும் தற்போது திமுகவை தன் மூச்சாக கருதி வரும் பத்மப்பிரியா கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த வீடியோவை தன் youtube சேனலில் வெளியிட்டு பிரபலமானவர். இந்த வீடியோவால் கிடைத்த திடீர் எதிர்பாராத வரவேற்பு அவரை தமிழக முழுவதும் அறியப்பட்ட நபராக மாற்றியது. அதனை தொடர்ந்து பத்மப்ரியா மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியில் சேர்ந்து கட்சியின் மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் பொறுப்பில் வகித்து வந்தார். அதனால் திமுகவிற்கு எதிராகவும் அதிமுக மற்றும் பாஜக என அனைத்து கட்சிகளுக்கு எதிராகவும் தனது கோஷத்தை முன்வைத்து வந்த இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அந்த தேர்தலில் இவர் மட்டும் இன்றி இவரின் கட்சியான மக்கள் நீதி மய்யமும் பெருந் தோல்வியை சந்தித்தது அதன் தலைவர் கமலஹாசனுக்கும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் தனது நடிப்பின் மீது அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அதனால் இவர் தன் கட்சியை சிறிது நாட்கள் கவனிக்காமல் இருந்த இடைவெளியில் கமலஹாசன் கட்சியை சேர்ந்த பலர் திமுகவிற்கு தாவ ஆரம்பித்தனர் அப்படி தாவியவர்களில் இந்த சுற்றுச்சூழல் அணி செயலாளர் பத்மப்ரியாவும் ஒருவர்! அதாவது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக தனது twitter பதிவுகள் தெரிவித்த பத்மப்ரியா அதற்கு பிறகு அரசியலில் இருந்து இவர் மொத்தமாக வெளியேறுகிறார் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தது அந்த நிலையில் திடீரென்று கமலஹாசனுக்கே சப்ரைஸ் கொடுக்கும் வகையில் திமுகவில் இணைந்தார். இதனை அடுத்து திமுகவிற்கு ஆதரவாக செயல்பட தொடங்கிய பத்மப்ரியா தனது எதிரி கட்சியின் பட்டியலில் மக்கள் நீதி மய்யம் கட்சியையும் சேர்த்துக் கொண்டார். திமுகவிற்கு ஆதரவாக பல மேடைகளில் பேசி வந்த பத்மப்ரியா முற்றிலுமாக திமுகவை தன் மூச்சாக நினைத்து வருகிறார். ஆனால் இவர் கமலஹாசன் கட்சியில் இருக்கும் பொழுது பெற்ற விமர்சனங்களை விட திமுகவில் இணைந்த பிறகு அதிக விமர்சனங்களை சந்தித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பத்மப்ரியா திமுகவை உயர்த்தி பேசியுள்ளார்.
அதாவது நான் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் திமுகவை விட வேறு எந்த கட்சியிலும் ஒரு நிலையான மற்றும் உறுதியான கொள்கையை கிடையாது!! கொள்கை என்பது அரசியலுக்கு மிகவும் முக்கியமானது, நானும் எந்த ஒரு அரசியல் பின்புலமும் இல்லாமல் அரசியலுக்கு வந்துள்ளவள் அரசியல் என்றால் என்ன தெரியாது அரசியல் எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது! அரசியலுக்குள் நுழைந்த பிறகு தான் கொள்கை சார்ந்து பணியாற்றுவது மிக முக்கியம் என்று எனக்கு தெரிய ஆரம்பித்தது. அதுவே ஒரு அரசியல் கட்சியை நீடித்து நிலைக்க வைக்கும் என்று எனக்கு தாமதமாக புரிந்தது. இதுதான் என்னுடைய டெஸ்டினி என்பது தெரியாமல் ஒரு இடத்திற்கு நான் போவதை விட இதுதான் எனது டெஸ்டினி, இவர்களுக்காகத்தான் போராடுகிறோம் என்று தெரிந்து கொண்டு போராடுகின்ற ஒரு இடத்தில் இருக்கும் பொழுது நம்முடைய பேச்சை இன்னும் அதிக வலுவில் பதிவு செய்ய முடியும் என்ற காரணத்திற்காகவே நான் தற்போது திமுகவில் இருக்கிறேன்.
மேலும் பெண்களின் உரிமை மாநில உரிமை என அனைத்திற்கும் வலுவான போராட்டங்களை திமுக தான் இதுவரை முன்வைத்து வந்துள்ளது இதற்கு மேலும் திமுக தான் முன்வைக்கும் வேறு எந்த கட்சியும் முன் வைக்காது அதனால் இவர்கள் கூட இருந்தால் இன்னும் வலு சேர்க்க முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை என்று திமுகவை ஆகா ஓகோ என பேசி புகழ்ந்துள்ளார். இதற்கு விமர்சனங்களும் தாறுமாறாக முன்வைக்கப்படுகிறது, அந்த வகையில் வாவ்... பாப்பா கொள்கையெல்லாம் பேசுது. "கொள்ளை, கொள்ளை, கொள்ளை" இது மட்டுமே ஓங்கோல் முன்னேற்ற கழகத்திற்கு உரித்தான கொள்கை. கொள்+கை. கை வலிக்கும் வரை கொள், கொள் கொள்ளு. கொள்ளையடி என்று ஒரு மெடிசன் இவரின் youtube சேனல் வீடியோ சிரிப்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. மேலும் தேர்தல் முடியும் வரை கொஞ்சம் அடக்கி வாசிக்கவும் எனவும் வேறு திமுகவினர் தரப்பில் இருந்து பத்மப்ரியாவுக்கு அறிவுரை வேறு சொல்லப்பட்டதாம்....