24 special

படுத்தியெடுக்கும் ராகு கேது... இந்த பெருமாள்தான் விடையே...

PERUMAL TEMPLE
PERUMAL TEMPLE

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது!! இது 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். மேலும் சோழ நாட்டின் நான்காவது திருத்தலம் என்ற சிறப்பு வாய்ந்த தளமாகும். இது மட்டும் அல்லாமல் பல்லவர்களின் ஆட்சி காலத்தில் இருந்தே இந்த கோவில் உள்ளது!! இவ்வளவு பழமை வாய்ந்த கோவிலுக்கு செல்ல அனைவரும் அதிகம் ஆர்வம் கொள்வார்கள்!!திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில் மிகவும் அழகான அற்புதமான இயற்கை சூழலில் அமைந்திருக்கும் ஒரு கோவில் ஆகும். இந்தக் கோவில் பழங்காலத்தில் அமைந்திருக்கும் கோட்டை போன்ற அமைப்பில் அமைந்திருப்பது சிறப்பு!! ஒரு சின்ன மலைக்கு மேலே ஒரு கட்டு மலைக்கோவில். இங்கு அமைந்திருக்கும் பெருமாளை 18 படிக்கு ஏரி சென்று தான் பார்க்க வேண்டும். இந்தக் கோவில் இரண்டு வாசல்களைக் கொண்டு அமைந்துள்ளது.


இது மிகவும் பழமை வாய்ந்த கோவில் என்பதால் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக உள்ளது!! இங்கு ஒரு குடைவரை கோவிலும் உள்ளது. இங்கு காட்சி தரும் பெருமாளை செந்தாமரை கண்ணன் என்று கூறுகின்றனர்.இங்கு சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் இவர்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீதேவி, பூதேவி, ஆதிசேஷன் மனித உருவில் வந்து பக்கத்தில் நின்று கைங்கரியம் செய்வது தனி சிறப்பு!! எங்கும் இல்லாத வகையில் இக்கோவிலில் உத்திராயின வாசல், தற்சயினவாசலை என இரண்டு வாசல்கள் உள்ளது. தை முதல் ஆணி வரை உத்திராயண வாசல் வழியாகவும், ஆனி முதல் மார்கழி வரை தற்சயினவாசலை வழியாகவும் பெருமாளை தரிசிக்க வேண்டும்!! இறைவன் தானே விரும்பி பூலோகத்தில் அருள் பாலிக்கும் சிறப்பு உண்டு!! எத்தனையோ அவதாரங்கள் எடுத்து நம்மை ஆசீர்வதிப்பதற்காக திருச்சியில் உள்ள இந்த திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில் எழுந்தருளி உள்ளார்!! உடையவர் வைணவத்தை வளர்ப்பதற்காக இந்த கோவிலில் தான் அரும்பாடு பட்டார் என்று வரலாறு கூறுகின்றது.

இந்த கோவில் சோழ நாட்டின் திருப்பதியாக கருதப்படுகிறது. அந்த அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த கோவில் இது!! இந்த கோவிலில் உள்ள புண்டரீகாட்ச பெருமாளை தினமும் வந்து தரிசனம் செய்தால் தோல் வியாதிகள்  குணமாகும் என்று கூறுகின்றனர். ராகு கேதுவினால் கடுமையான அவதிப்படுபவர்கள், எதிரிகளின் தொல்லையால் மன நிம்மதி இழந்து துடிப்பவர்கள், தொழில் போட்டியினால் வியாபாரத்தில் லாபத்தை இழந்தவர்கள், நோயினால் அவதிப்பட்டு டாக்டர்களால் கைவிடப்பட்டவர்கள் அனைவரும் புதுவாழ்வு பெறுவதோடு மட்டுமல்லாமல், பூர்வ ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தையும் விளக்கி நன்மை உண்டாகுவதற்கு வாய்ப்பு உண்டு!! இங்கு வந்து தரிசனம் செய்தால் எல்லோருக்குமே மோட்சம் கிட்டும் என்று நம்பப்படுகிறது! பெருமாளை தரிசிக்க 18 படிகள் கடந்து செல்ல வேண்டும். இந்த 18 படிகளும் 18 பகவத் கீதை அத்தியாயங்களை குறிக்கின்றது.

அடுத்த கோபுர வாயில் நான்கு வேதங்களாக கருதப்படுகிறது. அதன்பின் வழி பீடங்கள் உள்ளது!! நினைத்து நல்ல காரியங்கள் தட்டிப் போனால் இந்தக் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தால் நினைத்த நல்ல காரியங்கள் உடனடியாக நடக்கும் எந்த ஒரு இடர்பாடுகளும் இன்றி நடக்கும் என்று கூறுகின்றனர்!! குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு உள்ள தீர்த்தங்களில் தீர்த்தமாடி பின்னர் பெருமாளுக்கு அமுது செய்து அந்த பொங்கலை சாப்பிட்டால்  குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறுவர். இத்தகைய வரலாற்று பழமை மிக்க சக்தி வாய்ந்த கோவிலுக்கு நீங்களும் சென்று அந்த திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாளை வழிபட்டு வாழ்வில் அனைத்து இன்பங்களும் பெறுங்கள் !!