24 special

புதுசு புதுசா மத மாற்றம் செய்றாங்க பா...! வேதனையில் பெற்றோர்கள்

Mathamaatram
Mathamaatram

தமிழகத்தில் மத மாற்றங்கள் பல்வேறு வழிகளில் நடைபெறுவதாக நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட தமிழக அரசு தமிழகத்திற்கு கட்டாய மத மாற்ற தடை சட்டங்கள் தேவையில்லை தமிழகத்தில் கட்டாய மத மாற்றங்கள் நடைபெறவில்லை என பதில் அளித்து இருந்தது.


அது நடந்து ஏறத்தாழ ஒரு மாதம் கூட தாண்டாத நிலையில் தமிழகத்தில் அரங்கேறி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது, வைரலாகும் வீடியோவில் பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்று கொடுப்பதாக விடுமுறையில் வீட்டில் உள்ள குழந்தைகளை ஒரு பெண் வீடு வீடாக சென்று அழைத்து இருக்கிறார்.

பெற்றோரும் விடுமுறையில் வீட்டில் உள்ள குழந்தைகள் புதிதாக சிலவற்றை கற்றுக்கொண்டால் நல்லது தானே என அனுப்பி இருந்தனர் ஆனால் மறு நாள் தான் தெரியவந்து இருக்கிறது பிள்ளைகளை அழைத்து சென்ற பெண் நேரடியாக சர்ச்சிற்கு கூட்டி சென்று இருக்கிறார் என்று,

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் சிலர் மறு நாள் அதே போல் பிள்ளைகளை அழைத்து செல்ல வந்த பெண்ணை தடுத்து நிறுத்தி எங்கே அழைத்து செல்கிறீர்கள் என கேள்வி கேட்டதோடு நில்லாமல் பிள்ளைகளுக்கு நீங்கள் நல்லது கற்று கொடுக்க வேண்டும் என்றால் இங்கேயே கற்று கொடுக்கலாம் சர்ச் வாசலுக்கு அழைத்து சென்றுதான் கற்று கொடுக்க வேண்டுமா? ஏன் அம்மா பள்ளி செல்லும் பிள்ளைகளை கூட விட மாட்டிர்களா? அப்படி என்ன மத பற்று என கேள்வி எழுப்பினர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, ஒரு பக்கம் தமிழக அரசு தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்க மறுபக்கம் குழந்தைகளை கூட பல்வேறு வழிகளில் ஆசை காட்டி இது போன்று பல சம்பவங்கள் அறங்கேருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.