தமிழகமே கள்ள சாராய மரணம் குறித்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்க சத்தமில்லாமல் சென்னையில் மேயர் பிரியா ஒப்புதலோடு அரங்கேறி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
சென்னையில் சேப்பாக்கம் தொகுதியில் அரசு மாநகராட்சி பள்ளியில் 100 மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்த நிலையில் பள்ளி கட்டிடம் தரமற்றதாக இருப்பதாக கூறி, புதிதாக பள்ளி கட்டிடம் கட்டுவதாக ஒப்பந்தம் போட்டு பழைய பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது, இந்த சூழலில் பள்ளியில் படித்த வேறு பள்ளிக்கு தற் செயலாக மாற்றம் செய்யப்பட்டனர்.
புதிய கட்டிடம் எப்போது வரும் மீண்டும் நம் பள்ளியிலே சென்று படிக்கலாம் என்று காத்து இருந்த குழந்தைகளுக்கும் அப்பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைத்த பெற்றோர்களுக்கும் பெரும் அதிர்ச்சி செய்தி கிடைத்து இருக்கிறது பள்ளி இருந்த இடத்தில் பள்ளி கூடம் கட்டுவதற்கு பதில் கல்யாண மண்டபம் அதாவது சமுதாய நல கூடம் கட்டுவதாக மமுடிவு எடுத்து இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த திமுக கவுன்சிலர் மதன் என்பவர் சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை வைக்க அதை அப்படியே நிறைவேற்றி இருக்கிறது மேயர் பிரியா தலைமையிலான சென்னை மாநகராட்சி.
இந்த விவகாரம் தற்போது மெல்ல மெல்ல வெளிவர தொடங்கி இருக்கும் சூழலில், பள்ளியில் குழந்தைகளை சேர்த்த பெற்றோர்கள் மட்டுமின்றி பலரும் என்ன அநியாயம், பள்ளி கூடத்தை இடித்து விட்டு யாராவது கல்யாண மண்டபம் கேட்பார்களா? குழந்தைகள் படிப்பை காட்டிலும் சமுதாய நல கூடம் பெரிதா? இலவச உணவு திட்டம் என கொண்டுவந்து தமிழகத்தில் கல்வியில் புரட்சி செய்த காலம் மாறி இப்போது பள்ளி கூடத்தை அகற்றிவிட்டு இந்த செயல் தேவையா என பலரும் ஆதங்க குரலை பதிவு செய்து இருக்கிறார்கள்.
நிலைமை இப்படி சென்று கொண்டு இருக்க பெண் மேயர் பிரியா என்ன செய்து கொண்டு இருக்கிறார், அவருக்கு பள்ளி மாணவர்கள் படிப்பில் அக்கறை இல்லையா என பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர், இந்த சூழலில் தான் ஒரு தரப்பு திமுக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு நடிகை ஜோதிகாவையும் சூர்யாவையும் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை கோவிலை பற்றி விமர்சனம் செய்த ஜோதிகா, பள்ளி மாணவர்கள் படிப்பிற்கு ஏதாவது பாதிப்பு என்றால் முதல் நபராக வருவேன் என்று சொன்ன சூர்யா ஆகியோர் எங்கு இருக்கிறார்கள் நீங்கள் வசிக்கும் சென்னையில் அதுவும் அரசு மாநகராட்சி பள்ளியை இடித்துவிட்டு பள்ளி மாணவர்களை நடு தெருவில் நிற்க வைத்து இருக்கிறார்கள் ஏன் எதிர்ப்பு குரலை பதிவு செய்ய மறுக்கிறீர்கள் என ஆவேசமாக குரல் எழுப்ப தொடங்கி இருக்கின்றனர் பொதுமக்கள்.
பாஜகவிற்கு எதிராக வாய் திறந்த நடிகர் சூர்யா குடும்பம் தொடங்கி சமூக ஆர்வலர்கள் என பல்வேறு வழிகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை எதிர்த்த எந்த நபர்களும்சென்னையில் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் சமுதாய நல கூடம் கட்ட முயற்சி செய்துவரும் ஆளும் கட்சியை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன் என சாமானிய மக்களும் நேரடியாக கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
பள்ளி கட்டிடம் இடித்த இடத்தில் மீண்டும் பள்ளி கட்டிடம் மட்டுமே கட்ட வேண்டும் இல்லை என்றால் பெரும் சிக்கலை மேயர் பிரியா மட்டுமல்ல தமிழக அரசும் சந்திக்கும் என அரசியல் நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.