டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி பல்வேறு விவாதங்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மக்களவை நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென்று இரண்டு இளைஞர்கள் பார்வையாளர் அரங்கில் இருந்து எம்பிக்கள் அறையில் குதித்தனர் அந்த இளைஞர்கள் ஷுவில் மறைத்து வைத்திருந்த புகை குப்பியை எம்பிக்கள் அமரும் பகுதியில் வீசினார்கள். இதனால் அவை முழுவதும் புகைமூட்டமாக காணப்படட்டது. மேலும் சில எம்பிக்கள் அந்த இளைஞர்களை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதே நேரத்தில் மேலும் இருவர் வெளியில் கலர் பாம் போடப்பட்டுள்ளனர்.
இதன் விசாரணையில் ஒரு பெண் உட்பட மொத்தமாக ஆறு பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் பலரும் மத்திய அமைச்சகத்தின் பாதுகாப்பு குறைபாடு தான் காரணம் என விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள எம்பிக்கள் தமிழக அரசை குறை சொல்லும் கட்சிகள் இந்த சம்பவத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறது என விமர்சனத்தை முன் வைத்தனர். மேலும், நாடாளுமன்றத்தில் இந்த தாக்குதல் சம்பவம் முதன் முறையல்ல 22 ஆண்டுக்கு முன் இதே போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதாவது, 2001ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் நடைபெற்றது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். அப்போது 9 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உதவியுடன் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற இரண்டு அமைப்புகளால் நடத்தப்பட்டது என அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் லால் கிருஷ்ணா அத்வானி தெரிவித்திருந்தார். அப்போது விஐபி போலி அடையாள அட்டையை பயன்படுத்தி உள்ளே உள்ளே நுழைந்தனர். அந்த சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கதவுகளும் மூடப்பட்டு குற்றவாளிகளை பிடித்தனர்.
அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரித்ததில் அப்ஸல் குரு, ஜீலானி, நவஜோத் சந்து உள்ளிட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுக்கும் அளவிற்கு பூதகரமானது.அப்போது, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 5000 ராணுவ வீரர்களை கொண்டு கண்காணிக்கப்பட்டது. அஃப்சனுக்கு ஆரம்பத்தில் தூக்குதண்டனை அளித்த நீதிமன்றம் 2005ம் ஆண்டு அதனை ரத்து செய்தது. அதனை பிறகு அஃப்சல் குரு 2013ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். மீதம் உழவர்களை குற்றவாளி என தீர்ப்பளித்து சிறையில் உள்ளனர்.
அதேபோன்று இப்போது 2001 நினைவு நாளில் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரித்த நிலையிலும் பாதுகாப்பின் காரணமாகா 2 வேர் என மொத்தமாக ஆறு பேர் சேர்ந்து கலர் பாம்களை வீசியுள்ளனர். இவர்களிடம் பாஜக எம்பியின் பரிந்துரை பாஸ் இருந்தது மேலும் அதிர்ச்சியாகியுள்ளது. இதனால் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் பிரதமர் மோடி ஆட்சியில் நடந்துள்ளதால் மோடி அவர்களுக்கு கடுமையான சட்டம் விதிக்க ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. குற்றவாளிகளுக்கு ஆயில் தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தெரிகிறது. நேற்று நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று அவையில் எதிர்க்கட்சிகள் விவாதிக்கப்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.