தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அசோக் செல்வன் சூது கவ்வும் என்ற படத்தின் மூலமாக தனது நடிப்பை தொடங்கி ஓ மை கடவுளை, நித்தம் ஒரு வானம், போர்த் தொழில் என்ற பன்முகத் தன்மைகளை கொண்ட படங்களில் நடித்துள்ளார்.இவரும் நடிகர் அருண் பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியனும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்துள்ளனர் திடீரென கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் என அறிவிப்பு வெளியானது. கீர்த்தி பாண்டியனும் அன்பிற்கினியாள், தும்பா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் இவரது தந்தையான அருண்பாண்டியனும் சொந்தமாக டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனத்தை நடத்தி வருபவர். நடிகர் அசோக்செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் திருமண அறிவிப்பு என்பது யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பாக இருந்தது.
முதன்முதலாக இவ்விருவரின் புகைப்படங்கள் வெளியாவது இவர்களது திருமண புகைப்படங்களே! இதே நேரத்தில் இவ்விருவரும் சேர்ந்து ப்ளூ ஸ்டார் என்ற படத்திலும் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள் இவர்களது திருமண அறிவிப்பு யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகும் இவர்கள் சில சர்ச்சைகளை சந்தித்தனர், அவை அனைத்திற்கும் தனியார் youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்து இருவரும் பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இருவரும் படங்களில் நடித்து வருவதில் பிசியாக இருந்து வருகின்றனர். நடிகர் அசோக் செல்வங்களும் சபாநாயகர் ப்ளூ ஸ்டார் என்ற பல படங்களை தன் கையில் வைத்துள்ளார் அதே சமயத்தில் நடிகை கீர்த்தி பாண்டியனும் கொஞ்சம் பேசினால் என்ன, ப்ளூ ஸ்டார் மற்றும் கண்ணகி ஆகிய படங்களை தன்வசம் வைத்துள்ளார்.
இப்படி கணவன் மனைவி இருவரும் மாறி மாறி பிஸியாக நடித்து வருவதால் இருவரும் வீட்டில் ஒன்றாக இருக்கும் நேரம் குறைந்து விட்டதாகவும் நாங்கள் இருவரும் எத்தனை நாட்களில் வீட்டில் ஒன்றாக இருந்தோம் என்பதை எண்ணிப் பார்க்கும் அளவிற்கு நிலைமை உள்ளது என்று கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கீர்த்தி பாடியனின் இந்த பேட்டியும் படு வைரலாகப் பரவியது இதனை அடுத்து கீர்த்தி பாண்டியன் நடித்து வந்த கண்ணகி படம் இந்த வாரம் திரை அரங்குகளில் வெளியாக உள்ளதால் இப்படத்தின் ஃபர்ஸ்ட் ஷோ நேற்று திரையிடப்பட்டுள்ளது. அதற்கு பின்னர் படக்குழுவினர் அனைவரும் செய்தியாளர்களை சந்தித்த பொழுது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வரும் சினிமா பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் தேவையில்லாமல் பேசி கீர்த்தி பாண்டியனிடம் சரியாக வாங்கி கட்டிக் கொண்டார்.
அதாவது வீட்டுக்குள்ள தான் ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க நான் இந்த வாரம் உங்க ரெண்டு பேரோட படமும் மோதுதே என்ன கேள்வி எழுப்ப அதற்கு கீர்த்தி பாண்டியன் நாங்கள் வீட்டில் சண்டை போடுவோம்னு வந்து பாத்தீங்களா? என்று கேட்க அதற்கு பயில்வான் சரி போட்டின்னு வச்சுக்கோங்க என்று மழுப்பினார். உடனே கீர்த்தி பாண்டியன் எங்கள் இருவருக்கும் இடையில் எந்த போட்டியும் இல்லை சண்டையும் இல்லை என்று கூறினார் அதற்குப் பிறகும் அமைதியாகாமல் பயில்வான் கணவன், மனைவியிடையே சண்டை வந்தா தான் இல்லற வாழ்க்கை நல்லா இருக்கும் என்று கூற அதை நாங்க வீட்டிலேயே பார்த்துக்கொள்கிறோம் என்று கீர்த்தி பாண்டியன் கூறி பயில்வானை வாய் அடைக்க செய்துள்ளார். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பை சந்தித்தது. ஆனால் இதன் மூலம் அசோக்செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இடையில் எந்த ஒரு சண்டை சச்சரவுகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.