24 special

மக்களை நாங்கள் காப்பாற்றிவிட்டோம்.....கனவுலகத்தில் மிதந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!

Stalin, Chennai Rain
Stalin, Chennai Rain

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டத்தில் ஒரு நாள் தொடர்ந்து மழை பொழிந்ததால் சென்னை மாநகரமே மிதந்தது இதனால் மக்களின் இயல்பு வாழ்கை திரும்பாமல் கடும் சிரமத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது கண்டனத்திற்கு மாறியுள்ளது.


கடந்த சில தினங்களுக்கு முன் முதலமைச்சர் முக ஸ்டாலின் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் மழையால் பாதிக்கப்பட்ட இடத்தையும் காரிலேயே சென்று பார்வையிட்டு வந்தார். இப்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது ' சென்னையில் வரலாறு காணாத வகையில் மழை பெய்துள்ளது. இவ்வளவு பெரிய மழை, வெள்ள பாதிப்பு வரும் என்றும், நாள் முழுவதும் மழை பெய்யும் என எச்சரிக்கை தரப்படவில்லை. ஆட்சியில் இல்லாத போதும் கோவிட் காலத்தில் திமுக நிவாரண உதவிகளை வழங்கியது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் களப்பணியில் ஈடுபடும் இயக்கம் திமுக.,

 2015 ல் செம்பரம்பாக்கம் ஏரி திறப்புக்கு ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்க அதிகாரிகள் பயந்தனர். அப்போது ஏரியை கொஞ்சம் கொஞ்சமாக திறந்திருந்தால், பலர் உயிரிழந்திருக்க மாட்டார்கள். ஆனால், செம்பரம்பாக்கம் ஏரி நீரின் அளவை சரியாக பராமரித்து சென்னையை பாதுகாத்த அரசு திமுக அரசு. அதிமுக ஆட்சியில் உதவிப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டினர். கட்சி பாகுபாடின்றி திமுக அரசு மக்கள் பணி செய்து வருகிறது. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் உறுதியாக வழங்கப்படும்' என ஸ்டாலின் பேசினார். இந்நிலையில் இதற்கு பலரும் விமர்சனத்தை பேச தொடங்கியுள்ளனர்.

அதாவது, சென்னையில் மழை நீர் தேங்க முழு காரணமும் திமுக ஆட்சி செயல்படாதது தான் காரணம் என மக்கள் பல ஊடகங்களில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும், திமுகவில் உள்ள அமைச்சர்கள் எல்லோரும் 898 சதவீதம் மழை நீர் வடிகால் வாரியம் தொடர்பான பணிகள் முடிந்துவிட்டன. எவ்வளவு மழை வந்தாலும் அதனை எதிர்க்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தனர். இதனால் அசால்ட்டாக இருந்த மக்கள் மழை வந்த பிறகு அமைச்சர்கள் சொன்னதற்கு மாறாக நிகழ்ந்தது. இதனால் தமிழக அரசு மீது கடும் கோபத்தில் ஆளாக்கினார்கள். எங்களை யாரும் பார்க்க முன் வரவில்லை என மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். மக்களுக்கு உதவி செய்ய பாஜக, அதிமுக போன்ற எதிர்கட்சிகள் களத்திற்கு சென்றாலும் திமுகவை தவிர உள்ளே மற்ற கட்சிகள் வரக்கூடாது என திமுக நிர்வாகிகள் மிரட்டுவதாக விமர்சனமும் எழுந்தது.

இந்நிலையில் இன்று வரை ஒரு சில பகுதிகளில் சென்னையில் தண்ணீர் வடியாமல் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மக்களை காப்பாற்றி விட்டோம் என பேசுவது சரியானது அல்ல என திமுகவில் உள்ள உடன்பிறப்புகளே சிலர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். முழுவதும் நனைந்து விட்டு முக்காடு போடுவது எதற்கு என்று நெட்டிசன்கள் கலாய்த்து வர தொடங்கியுள்ளனர். மக்கள் மனதில் முழுவதுமாக திமுக பற்றி மக்கள் இடத்தில தெரிந்துவிட்டது ஆனால், இப்போ வந்து நாங்கள் மக்களை காப்பாற்றி விட்டோம் என கூறுவது நம்பகத்தன்மை விதைப்பது அது மரமாக மாறாது என இணையத்தில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.