தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறும் நாடளுமன்ற தேர்தலுக்காக அரசியல் தலைவர்கள் தீயாக பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளுடன் நான்கு முனை போட்டியாக நடக்கவுள்ளது. அந்த வகையில் திமுக 21 இடத்தில உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. திமுகவின் கோட்டையாக இருக்கும் வடக்கு பகுதியில் மக்கள் திமுகவுக்கு எதிராக திரும்பியுள்ளது திமுக தலைமைக்கு கலக்கத்தை ஏறப்டுத்தியுள்ளது.
திமுக கூட்டணி கடந்த முறை தொடர்ந்த கூட்டணி மீண்டும் உறுதிப்படுத்தி அதனையே இந்த தேர்தலுக்கும் கொண்டு வந்துள்ளது. தொகுதிகளை மட்டும் மாற்றியமைத்துள்ளது. தென் மாவட்டத்தில் பெரியதாக ஆர்வம் காட்டாத திமுக வாட மாவட்டங்களில் கடந்த முறை வாய்ப்பு கொடுத்தவர்களுக்கு மீண்டும் வாய்பளித்துள்ளது. அந்த வகையில் சென்னை திமுகவின் கோட்டை என்று காலம் காலமாக தன் வசம் வைத்து வந்த திமுக தற்போது அது மாறி விட்டது.
சென்னையில் மூன்று மக்களவை தொகுதிகள் உள்ள அதில் தென் சென்னையில் திமுக சார்பாக தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். பாஜக சார்பாக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். மத்திய சென்னையில் திமுக சார்பாக தயாநிதி மாறனும், பாஜக சார்பாக வினோஜ் பி செலவும் போட்டியிடுகிறார். வட சென்னையில் திமுக சார்பாக கலாநிதி வீராசாமியும், பாஜக சார்பாக பால் கனகராஜ் போட்டியிடுகிறார். இந்த நிலையில் வாக்கு சேகரிக்க தயாநிதி மாறன் மத்திய சென்னையில் தயாநிதி மாறன் சென்றபோது அவரை அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய சென்னையில் பெரிய அளவில் தயாநிதி மாறன் வெற்றி பெறுவார் என்று திமுக எதிர்பார்த்த நிலையில், ஆனால் களத்தில் அது அப்டியே மாறிவிட்டது. நேற்று பிரச்சாரத்திற்கு சென்றபோது மக்கள் வழிமறித்து அவரிடம் கேள்வி எழுப்ப அங்கு பரப்ரப்பு ஏற்ப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக மக்களின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திணறுவதும் மக்களிடம் கோவத்தை வெளிப்படுத்துவதும் போன்று அமைந்துள்ளது. முன்னதாக தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் சென்றபோது அவரது தொகுதியில் மக்கள் உள்ளே விடாமல் மழை வெள்ளத்தின் போது வராமல் இப்போ எதற்கு வந்திங்கள் என்று கேள்வி எழுப்பி வாக்குவாதம் நடைபெற்றது இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது.
இப்படி திரும்பும் பக்கம் எல்லாம் திமுகவுக்கு எதிராக இருக்க முக்கியமா சென்னை கோட்டை என்று சொல்லும் திமுக தற்போது கோட்டையில் கோட்டை விட்டது. இதனால் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் மத்திய சென்னை மக்களிடம் பிரச்சாரத்திற்கு செல்லம்போது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பாஜக போட்டியிடும் அணைத்து தொகுதியிலும் மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர் . மத்திய சென்னையிலும் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் வினோஜ் பி செல்வம் அவர்ளுக்கு வரவேற்பானது அமோகமாக அமைத்துள்ளது. தயாநிதி மாறனுக்கு நிச்சயம் வினோஜ் கடுமையான போட்டி கொட்டுப்பார் என்று கூறப்படுகிறது. மக்களும் திமுகவை வெறுத்துவிட்டு மாற்றத்தை எதிர்பார்த்து வருகின்றனர் இந்த தேர்தலில் களம் மாறும் என்பதில் மாற்றமில்லை பொறுத்திருந்து பாப்போம்.