பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக அரசியல் களம் தமிழகத்திலும் மாற தொடங்கி இருப்பதாக பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர் இந்த சூழலில் பஸ்ஸிற்கு காத்து இருந்த பெரியவர் தெரிவித்த கருத்து ஆளும் கட்சியான திமுகவிற்கு மட்டுமல்ல மோடியை தீவிரமாக எதிர்க்கும் நபர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறுகிறார்கள் என கேட்க சட்டென பெரியவர் எனக்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லை சார், பணத்தை வைத்து இருப்பவர்களுக்கு தான் இந்த பாதிப்பு எல்லாம் எங்களை போன்ற சாமானிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பேசியவர் அடுத்து தெரிவித்த கருத்து தான் சற்று ஆச்சர்யத்தை அளித்தது.
பிரதமர் மோடி நல்லவர் சார் அவர் மீண்டும் அடுத்த 5 வருடம் ஆட்சிக்கு வரவேண்டும் வந்தால் நாடு நன்றாக இருக்கும் இதை காட்டிலும் முக்கிய விஷயம் என்னவென்றால் மோடி அடுத்த அப்துல் கலாம், இங்கு எல்லாரும் மோடியை தவறாக பார்க்கிறார்கள் அந்த கருத்து மாறவேண்டும்.
2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப பெற்றது மிக பெரிய நல்ல முடிவு என தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு திமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மாற்றப்பட்டதை விமர்சனம் செய்ய பொது மக்களோ தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் பெரியவர் ஒருவர் மோடி நல்லவர் அவர் அடுத்த 5 ஆண்டுகள் வரவேண்டும் என கூறியதோடு மட்டுமல்லாமல் அடுத்த அப்துல் கலாம் என கூறும் அளவிற்கு தமிழகத்தில் பிரதமர் மோடியின் முகம் சாமானிய மக்கள் மத்தியிலும் சென்று இருப்பது திமுக உள்ளிட்ட சில கட்சிகளுக்கு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.