முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக செல்லும் அண்ணாமலை 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுக தனது சார்பில் பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்தது ஆனால் அதில் பாதியைக் கூட தற்போது வரை நிறைவேற்றவில்லை என தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதனாலையே இருபதற்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோன நிலையும் தற்போதைய ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடந்து வருகிறது. ஏற்கனவே கட்சியின் மூத்த அமைச்சர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்கவே நேரம் பத்தாமல் திணறிக் கொண்டிருக்கின்ற திமுக தலைமைக்கு, தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்த மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று போராட்டங்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறதால் மற்றுமொரு தலைவலியை திமுகவிற்கு ஏற்படுத்தி உள்ளது.
மேலும் மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை தீர்வு அமைச்சர் செந்தில் பாலாஜி கூட டாஸ்மாக்கில் ஏதும் முறைகேடு நடத்தப்படவில்லை என்று கூறிக் கொண்டிருந்தார். ஆனால் மரக்காணம், விழுப்புரம் பகுதிகளில் கள்ளச்சாராயங்களால் 22 பேர் உயிரிழந்த சம்பவமும் தமிழகத்தில் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்த உள்ளது. அதோடு டாஸ்மார்க்கில் விற்கப்படும் மதுபானங்களில் பத்து ரூபாய் அதிகமாக வைத்து விற்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதனால் ஏற்படும் பல்வேறு சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டாஸ்மார்க் விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளார்.
அதாவது தமிழகத்தில் குடி போதைக்கு அடிமையாகி 9 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் மற்றும் மதுவில்லாத இந்தியாவை உருவாக்குவது என்பது சற்று எளிதான காரியம் அல்ல ஏனென்றால் இது ஜனநாயக நாடு ஆதலால் தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் அனைத்தையும் சீர்படுத்துவது மதுவிலக்கை நோக்கி நகரும் வழியாக பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ள அண்ணாமலை மேலும் 2020 ஆண்டில் மதுபானத்திற்கு அடிமையானவர்களின் விகிதம் 5% ஆக இருந்தது தற்போது அது ஒன்பது சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஆதலால் ஐந்தாயிரத்திற்கு அதிகமாக இருக்கும் மதுபான கடைகளை ஆயிரத்திற்கும் கீழாக கொண்டு வருவதற்கான நடைமுறைகளையும், மதுபானத்தால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், நிதி துறையும் பாதிக்கப்படாத வகையில் மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் போன்ற தமிழக நலனைக்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதுபான மூலம் பெறப்பட்ட வருமானம் கடந்த வருடத்தில் 22 சதவிகிதம் அதிகமாக்கி உள்ளது, ஆதலால் தற்போது இருக்கும் டாஸ்மாக்கின் அளவை குறைக்க வேண்டும் எப்படி படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவது என்பது பற்றியும், டாஸ்மாக்கில் பெறப்படும் வருமானத்தை வேறு எந்த வழிகளில் இருந்து பெறப்படலாம் அரசுக்கு நஷ்டம் ஏற்படாமல் என்பது போன்ற பல வழிமுறைகள் அடங்கிய ஒன்றை தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக வெள்ளை அறிக்கையாக ஆளும் அரசுக்கு பதவியில் இல்லாத கட்சி ஒன்று சமர்ப்பிக்க உள்ளது என்றும் செய்தியாளர்களிடம் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்த வெள்ளை அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினிடம் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இன்னும் சில தினங்களில் முதல்வர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள இருப்பதால் முதல்வர் திரும்பிய பிறகு இந்த சந்திப்பு நிகழும் என்றும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆளும் அரசுக்கு இந்த மாதிரி வெள்ளை அறிக்கை சமர்ப்பிப்பதற்கான தேவையும், அவசியமும் பதவியில் இல்லாத கட்சிக்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தமிழக மக்களின் நலனுக்காக மட்டுமே இத்தகைய முடிவை பாஜக செயல்படுத்த உள்ளதாக பாஜக வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.