பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் உள்ள வெளியூர் மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து உள்ளனர். 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்து வருகிறது. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்ட மக்கள் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் பெருத்து நிலையம் தொடங்கப்பட்டது. தற்போது தென் மாவட்ட மக்கள் பேரூந்துநிலையம் சென்ற நிலையில் போதிய வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களின் வசதிக்காகவே, தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்திருக்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து மொத்தம் 19,484 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.. இதில் சென்னையை பொறுத்தவரை, கோயம்பேடு, கிளாம்பாக்கம், பூந்தமல்லி, மாதவரம், தாம்பரம் சானடோரியம், கே.கே.நகர் ஆகிய 6 இடங்களில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகம் நேற்று முன்தினம் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், அரசு விரைவு பஸ்களில் ரிசர்வ் செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு வந்து பஸ் ஏற வேண்டும் என்றும், ரிசர்வேஷன் செய்யாத பயணிகள் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு சென்று பஸ் ஏற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இதக்கிடையில் பலருக்கும் இந்த செய்தி முழுமையாக் சென்றடையவில்லை எல்லோரு கோயம்பேடு நோக்கி படையெடுத்தனர். அங்கு சென்று தாங்கள் ரிசர்வேஷன் செய்த பஸ்கள் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். கிளாம்பாக்கம் சென்ற பயணிகளும் அங்கு ரிசர்வ் செய்யாதவர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளன. பஸ்கள் போதிய வசதி இல்லாமலும் அங்கு மக்கள் வசதிக்காக உணவு கடைகள் இல்லாமல் இருப்பதாகவும் வருத்தத்தை தெரிவிக்கின்றனர். ரிசர்வ் செய்யாதவர்களுக்கு அங்கு சென்றதால் போதிய பஸ்கள் இல்லை என்று குடும்பத்துடன் சென்றவர்கள் ககுழந்தைகளை வைத்து கொண்டு கண்ணீர் வடிக்கின்றனர்.
அதிலும், இப்போது அமைச்சர்கள் யாரவது வந்து சிறப்பாக பேரூந்துநிலையம் இயங்குகிறது என்று சூழ சொல்லுங்கள் இங்க இருக்கக்கூடிய மக்கள் சரியான பாடம் புகுத்துவார்கள் என ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர். பேருந்து இல்லை என்று சொல்லுகிறார்கள் ஆனால் அந்த பக்கம் சென்றால் 100 பேருந்து சும்மாவே நிறுத்தி வைத்துர்க்கிறார்கள் அதனை ஓட்டுனர்கள் காவல் காத்து வருகின்றனர் என்று அரசு கையாளுவது சரியில்லை என்ற அளவிற்கு விமர்சனத்தை கொட்டி வருகின்றனர் மக்கள். பேசாமலே கோயம்பேட்டில் வைத்திருக்கலாம் எதற்க்காக மக்களை இப்படி கஷ்டப்படுத்துகிறது? தமிழக அரசுக்கு கேள்வி முன் வைக்கின்றனர்.
தமிழக அரசு பொங்கலுக்குள் பேருந்து நிலயத்தை திறந்து ஒரு கலெக்ஷனை பார்க்கலாமா என்ற எண்ணத்தில் தான் திறந்தது. ஆனால், போட்ட மொத்த திடமும் தலைக்கீழாக சென்றுவிட்டதாக கூறுகின்றனர். கிளம்பாக்கத்தில் மக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் இயதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.