பொங்கலை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படம் ஏதும் வெளியாகவில்லை இதனாலே ரசிகர்கள் பலரும் திரைக்கு செல்லம்மால் இருக்கின்றனர். மேலும், நேற்று வெளியான கேப்டன் மில்லர், அயலான், மிஷன் சேப்டர் 1 போன்ற படங்களும் வெளியானது. இதில் குறிப்பாக ஹிந்தியில் எடுத்து ரீமேக்கில் வெளியான மேரி கிறிஸ்துமஸ் படம் குறித்து எந்த வித கருத்தும் வெளியாகாமலே உள்ளது.
தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஏலியனை கொண்டு உருவான படம் அயலான் இந்த படம் அனைத்து தரப்பிலும் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படமும் ஆக்ஷன் கலந்த திரைப்படமாக அமைந்துள்ளது. இதுவும் மக்கள் இடத்தில் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. மிஷன் சேப்டர் 1 படம் குறைவான திரையரங்கம் கிடைத்ததால் அந்த படமும் மக்கள் இடத்தில் நல்ல கருத்தை பெற்று வருகிறது. முக்கியமாக வளர்ந்து வரும் நடிகர்கள் படம் என்பதால் மக்கள் கூட்டம் குறைவாக செல்கிறது என்ற காரணத்தை முன்வைக்கின்றனர் சினிமா வட்டாரங்கள்.
தமிழ் சினிமாவில் வளர்ந்தது போதும் என்ற நினைப்பில் ஹிந்தி சினிமாவிற்கு சென்றார் நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் தன் மகனை அறிமுகப்படுத்திவிட்டு ஹிந்தி படத்திற்க்கு சென்றார் விஜய் சேதுபதி. முதல் படமாக நடிகை கத்ரீனா கைப்ப்புடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் நடித்தார் இந்த படமும் நேற்று வெளியானது. இந்த படம் குறித்து எந்த வித கருத்தும் வெளியாகவில்லை என்பது உண்மை. இதனால் இணையத்தில் 'தனுஷ் நடிச்சி வந்துருக்குற கேப்டன் மில்லரை பத்தி பேசுறானுங்க சிவ கார்த்திகேயன் நடிச்சி வந்துருக்குற அயலானை பத்தி பேசுறானுங்க அருண் விஜய் நடிச்சி வந்துருக்குற மிஷன் சாப்டர்-1 பத்தி பேசுறானுங்க ஒருத்தனாவது நான் நடிச்சி வந்துருக்குற மேரி கிறிஸ்துமஸை பத்தி பேசுறானுங்களான்னு பாரேன்'.. என விஜய் சேதுபதி ரசிகர்களே கருத்து தெரிவிக்கின்றனர்.
முன்னதாக தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பு சர்ச்சை தொடர்ந்து வந்த நிலையில், விஜய் சேதுபதி மேரி கிறிஸ்மஸ் படம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியுள்ளார் அதுவும் ஹிந்தியில் சரளமாக பேசி உள்ளார். இதனால் ஹிந்தி தெரியாது போடா என்று தமிழ் திரை உலகின் போராளிகள் அனைவரும் கூறியது எல்லாம் பொய்யா? வடஇந்தியா சென்றால் இந்தி பேசுவீர்கள் என்று விமர்சனங்கள் எழுந்தது. தமிழை விட்டு ஹிந்தி படத்துக்கு சென்றதால் தமிழ் ரசிகர்கள் அவரை கைவிட்டார்களா என்ற விமர்சனமும் வந்த வண்ணம் உள்ளன. விஜயுடன் நடித்த நடிகருக்கு இந்த நிலைமையா என்ற விமர்சனத்தையும் நெட்டிசன்கள் முன்வைக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.