24 special

மோடிக்கு ஆதரவாக திரும்பும் தமிழக மக்கள்...!

Pmmodi
Pmmodi

இந்தியாவில் ஜி 20 மாநாடு விரைவில் நடைபெற உள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இந்தியர்கள் உள்ளனரா? என்பது தொடர்பாக அமெரிக்க ஆய்வு அமைப்பு நடத்திய சர்வேயின் முடிவு வெளியாகி உள்ளது


இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ஜி20 நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் 2 நாட்கள் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஜி20 கூட்டமைப்பில் இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியங்களின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் தான் அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் PEW எனும் ஆராய்ச்சி மையம் சார்பில் பிரதமர் மோடிக்கு ஆதரவான நம்பிக்கை குறித்து சர்வே ஒன்றை மேற்கொண்டது. இதில் இந்தியாவில் இருந்து 2,611 பேர் உள்பட மொத்தம் 24 நாடுகளை சேர்ந்த 30,861 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

இந்த கருத்து கணிப்பு பிப்ரவரி மாதம் 20ம் தேதி முதல் மே மாதம் 22ம் தேதி வரை நடந்தது. இதில் பிரதமர் மோடியையும், இந்தியா மீதான பிற நாடுகளின் பார்வையையும் மையப்படுத்தி கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

அதன்படி பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா மீது நம்பிக்கை உள்ளது என மொத்தம் 46 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 34 சதவீதம் பேர் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்துள்ள நிலையில் 16 சதவீதம் பேர் கருத்து சொல்ல விரும்பாமல் இருந்துள்ளனர். குறிப்பாக இஸ்ரேல் நாட்டு மக்கள் இந்தியா மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நாட்டை சேர்ந்த 71 சதவீதம் பேர் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்

மேலும் 2வது முறையாக பிரதமராக மோடி இருக்கும் நிலையில் அவருக்கான ஆதரவு குறித்த கேள்வி கேட்கப்பட்டது. இதில் 80 சதவீத இந்தியர்கள் பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதில் 55 சதவீதம் பேர் பிரதமர் மோடி மீது அதீத ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர். புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் சர்வேயில் பங்கேற்றவர்களில் 10 பேரில் 8 பேர் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மாறாக 10 பேரில் 2 பேர் பிரதமர் மோடி மீது நம்பிக்கையின்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‛‛PEW கருத்து கணிப்பின்படி பிரதமர் மோடியின் புகழ் இன்னும் அப்படியே உள்ளது. இந்தியா உள்பட உலகம் எங்கும் பெரும்பான்மையான மக்கள் மோடி தலைமையிலான இந்தியாவை நம்புகின்றனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.