லயோலா கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே உதயநிதியுடன் விஷால் நட்பாக இருக்கிறார். நடிகர் விஷாலின் தந்தை திரைப்பட தயாரிப்பாளராக இருக்கும் நிலையிலும் உதயநிதி ஸ்டாலினும் விஷால் நடைத்துள்ள படங்களை தயாரித்துள்ளார். இது மட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலின் இதற்க்கு முன் நடத்தி வந்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் விஷாலின் படத்தை விலை கொடுத்து வாங்கியதாக தகவல்களும் வெளிவந்துள்ளது.இவ்வாறு விஷால் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருமே 30 ஆண்டுகளுக்கு மேலாக நட்பில் இருந்து வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்த பிறகு இவர்களுக்கு இடையே உள்ள நட்பில் விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது.
மேலும் ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் விஷால் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நட்பு மிக ஆழமாக இருந்த நிலையில் தற்போது தான் இவர்களுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன, தற்போது உதயநிதி ஸ்டாலின் முழுநேர அரசியலில் ஈடுபடாக இருப்பதால் விஷால் போன்ற தனது சினிமா நண்பர்களுடன் விரிசலில் இருப்பதாகவும் சில சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.உதயநிதி ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு நீட் போராட்டத்தை நடத்தியதும் நீட் போராட்டத்தை ஒழிப்பதன் ரகசியம் எனக்கு தெரியும் என்று கூறிவிட்டு 2024 தேர்தலில் வெற்றி பெறுவது தான் அதனுடைய ரகசியம் என்று தெரிவித்ததும் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உதயநிதியின் அரசியல் பத்தி நடிகர் விஷாலிடம் கேள்வி எழுப்பிய போது அவர் கூறிய பதில்கள் திமுகவிற்கு குறிப்பாக உதயநிதிக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நடிகர் விஷால் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு அவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மெர்சி ஹோமில் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவளித்து பிறந்த நாளை கொண்டாடினார்.மேலும் அங்கிருந்து வெளியேறிய போது செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொண்ட நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது வழக்கம் போல பிறந்தநாள் அன்று ஹோமில் இருக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவளித்து விட்டதான் அன்றைய நாளை தொடங்குவேன் என்று கூறினார் மேலும் இவ்வாறு செய்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிக் கொண்டிருந்த போதே செய்தியாளர்கள் நடிகர் விஷாலிடம் விஜய் அரசியலுக்கு வந்தது மற்றும் ரஜினி அரசியலுக்கு வந்தது அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அரசியலில் செய்து வருவது போன்றவற்றை வரிசை கட்டி கேள்விகளாக எழுப்பினர்.
மேலும் இதற்கு பதில் கூறிய நடிகர் விஷால் விஜய் எனக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகர் என்றும் ரஜினி குறித்து கேள்வி எழுப்பியதற்கு சூப்பர் ஸ்டாராக ரஜினி இன்றளவும் அந்த பட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக திரை துறையில் சாதனை படைத்து வருகிறார் என்றும் கூறிவிட்டு உதயநிதி ஸ்டாலின் அரசியலில் தற்போது செய்து வரும் புரட்சியைப் பற்றி கேட்டதற்கு அதை பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும் அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் நான் அதனை கண்டு கொள்ளவில்லை என்று பொதுவாக பதில் கூறி சென்றது உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக தரப்பில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உதயநிதி ஸ்டாலினின் ஒரு நண்பராக இருந்து கொண்டு இப்படி ஒரு பதிலை கூறியிருப்பார் என்று யாருமே எதிர்பார்க்காத தருணத்தில் தற்போது அரசியல் மத்தியில் நடிகர் விஷால் பேசியது சில விமர்சங்களை ஏற்படுத்தி உள்ளது.இப்படி உதயநிதி பற்றி கேள்வி கேட்டபோது அதைப்பற்றி எனக்கு தெரியாது என நடிகர் விஷால் கூறியதும் திரைத் துறையில் இருக்கும் ஒருவரே தனது நண்பர் அதுவும் உதயநிதி ஸ்டாலின் நன்றாக செய்கிறார் சிறப்பாக செய்கிறார் என்று பாராட்டாமல் என்னிடம் அதைப் பற்றி கேட்காதீர்கள் என்ன விடுங்கள் என்று எஸ்கேப் ஆகி சென்றதும் தற்போது வரிசைகட்டி விமர்சிக்கப்படுகின்றன.