24 special

கனிமொழி செய்த செய்ததால் தூத்துக்குடி மக்கள் அதிருப்தி!

kanimozhi, thoothukudi rain issue
kanimozhi, thoothukudi rain issue

2023 ஆம் ஆண்டு முடியும் பொழுது பல துக்கங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டு முடிந்தது. டிசம்பர் மாதத்தின் துவக்கத்தில் சென்னையை தாக்கிய புயலால் கடுமழை பெய்ததோடு அடுத்த வாரத்தில் தென் தமிழகம் கனமழையால் பெரும் பாதிப்பை சந்தித்தது. அதிலும் தூத்துக்குடி பகுதி என்பது கனமழையால் அதிக பாதிப்பை சந்தித்தது தூத்துக்குடி பகுதி முழுவதும் மழையால் மூழ்கியதோடு மக்கள் பலரும் இதில் இறந்ததாக கூறப்படுகிறது, மேலும் மழை நின்று 20 நாட்களாகியும் இன்னும் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வடியாமல் இருப்பதாகவும் அதற்கான பணிகள் அரசு தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதனால் காலரா மலேரியா டெங்கு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான பாதிக்கும் நிலையில் நாங்கள் உள்ளோம் என்றும் ஆனால் எங்களுக்கு என்ன அத்தியாவசியமாக தேவைப்படுகிறது என்பதையும் இந்த அரசு உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் உள்ளது என்றும் விமர்சனங்கள் தூத்துக்குடி மக்கள் தரப்பில் முன் வைக்கப்பட்டு வருகிறது. 


இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக கலைஞருக்கு பாராட்டு விழா நடைபெற்றதும் அதில் திரையுலகங்களை அழைத்து மாபெரும் விழாவை நடத்தியதும் தூத்துக்குடி மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் இங்கு எந்த நேரத்தில் எந்த வியாதி எங்களை தொற்றுமோ! இவர்கள் வந்து மீட்பார்களா இவர்கள் வந்து இதனை சரி செய்வார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறோம் இந்த நிலையில் முதல்வருக்கு அவரது தந்தையின் பாராட்டு விழா தான் முக்கியம் ஆகிவிட்டது என்ற அதிருப்திகளை முன் வைத்தனர். மேலும் தூத்துக்குடி எம்பி யாக இருக்கும் கனிமொழி மழை, வெள்ளத்திற்கு பிறகு இருசக்கரங்களின் வாகனங்களில் வந்து எங்களிடம் என்ன வேண்டும் என்ற கோரிக்கைகளை கேட்டார் ஆனால் அதற்குப் பிறகு எங்களுக்கு என்ன ஆனது என்று கூட அவர் இதுவரை நினைத்து பார்க்கவில்லை! மழையில் பாதித்த பொழுதும் தங்களுடன் இல்லை அந்த எம்பி அதற்கு பிறகு இரண்டு மூன்று நாட்களுக்கு மட்டும் இங்கு வந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டு பிறகு தூத்துக்குடிக்கு என்ன நிலை என்பதை அவர் மறந்து விட்டார் போல என அரசியல் விமர்சிக்கர்களால் விமர்சிக்கப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி கனிமொழிக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கனிமொழி எம்பி யின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அவரது ஆதவாளர்களும் தொண்டர்களும் தலைமை ஏற்க வா! தலைவியே என்ற போஸ்டர்களை அதிக அளவில் ஒட்டி பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள். மேலும் தமிழக முதல்வரையும் பார்த்து அவரிடம் ஆசிர்வாதத்தையும் பெற்றுள்ளார் கனிமொழி! இதனால் தொடர்ந்து எங்களை கவனிக்காமல் திமுக அவரவர் வேலைகளில் பிஸியாக உள்ளனர்! நாங்கள் இங்கு தவித்துக் கொண்டிருக்கிறோம் உங்களுக்கு பிறந்தநாள் தேவையா என்ற வகையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தவர் அப்போது செய்தியாளர்களிடம், 'பெரும் பாதிப்புகளை தூத்துக்குடி மக்கள் சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் பிறந்த நாள் கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை! இதனை எனது நண்பர்களும் தொண்டர்களும் நிச்சயமாக புரிந்து கொள்வார்கள்' என்றும் கூறியுள்ளார்.இது தூத்துக்குடி மக்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது, அண்ணனிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு சென்னையில் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு தூத்துக்குடி மக்கள் துன்பத்தில் உள்ளனர் அதனால் பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை என கூறியது எங்களின் இழிவுபடுத்துவதாக உள்ளது, இது கனிமொழிக்கு தேவையில்லாத வேலை அடுத்த முறை ஓட்டு கேட்டு வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என தூத்துக்குடி மக்கள் கொந்தளிப்பில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.