Cinema

தல அஜித்திடம் வம்பிழுத்த வடிவேலு...! லிஸ்ட் பெருசா போகுதே முடியலடா சாமி!

Ajith, Vadivel
Ajith, Vadivel

தமிழ்த் திரைப்பட நடிகரும், பின்னணிப் பாடகரும் சேர்ந்த வடிவேல். டி.ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வைகைப்புயல் என்னும் பட்டப்பெயருடன் பரவலாக அறியப்படுகிறார். இவர் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் சின்னக்கவுண்டர் படத்தில் விஜயகாந்துடன் நடித்ததே அந்த படத்தில் வாய்ப்பு கொடுக்கவே வடிவேலு இந்த நாள் வரை அவரை பற்றி பேசாடுகிறது. வடிவேல் விஜயகாந்த் மோதல் தொடர்ந்து வடிவேல் முன்னனி நடிகர்கள் சிலரிடம் வம்பிழுத்த சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ் சினிமாவில் முன்னதாக இருந்த கவுண்டமணி-செந்தில் இருவரும் நகைச்சுவை நடிகராக வலம் வந்தனர். இவர்கள் இருவரும் நடிக்கும் காட்சிகளில் வடிவேலு அவ்வப்போது சிறு சிறு காதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக சின்னக்கவுண்டர் படத்தில் நடித்த வடிவேலு அடுத்த அடுத்த படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அப்போது விஜயகாந்துக்கும் வடிவேலுக்கும் சிறு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுநாள் வரை விஜயகாந்திடம் பேசாத வடிவேலு, விஜயகாந்த் மறைவிற்கு கூட எட்டி பார்க்கவில்லை இது சினிமா வட்டாரம் மட்டுமின்றி மொத்த மக்களும் சிந்தித்தனர் இவ்ளோ மோசமான நபரா வடிவேல் என்ற பெயர் பெற்றார்.

இப்போது விஜயகாந்த் மட்டும் இல்லையாம் வடிவேலு வம்பிழுத்தது குறித்து புதிய தகவல் கசிந்துள்ளன. அந்த வகையில் ராஜா படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார் வடிவேலு. அப்போது ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போது டயலாக்கிற்குள் வாடா, போடா என்பதை அவராகவே சேர்த்து கொண்டாராம். அஜித் சாதாரணமாகவே யாரையும் மரியாதையுடன் பேச வேண்டும் என நினைப்பவர். இது அவருக்கு பிடிக்கவில்லை. சரி படத்துக்கு என சும்மா விட்டு இருக்கிறார் தொடர்ந்து சினிமா ஸ்பாட்டிங்கில் வாடா, போடா என கூப்பிடுள்ளார் வடிவேல். இது சுத்தமாக அஜித்குமாருக்கு பிடிக்கவில்லை காரணாம் அஜித் மரியாதையை கொடுத்தும், எதிர்பார்க்கும் மனிதர் அவரிடம் வடிவேல் நடந்து கொண்டது. இதனால் தல அஜித் தான் நடிக்கும் எந்த படத்திலும் வடிவேலுவை சேர்த்து கொள்ளவில்லையாம்.

விஜயகாந்த்துடன் ஒரு படத்தில் நடித்த வடிவேலு கதைக்கேற்றார் போல் வசனம் இருக்க அதனை வடிவேலு படித்துவிட்டு புதியதாக சிந்தித்து புது வசனத்தி பேசியுள்ளார் இதை கேட்ட இயக்குனர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கடுப்பாகியுள்ளார். உடனே விஜயகாந்த் கூப்பிட்டு அவங்க சொன்ன வசனம் மட்டும் பேசு என கண்டித்துள்ளார். அப்போது வடிவேலு அந்த வசனம் நல்லா இல்லை என கூற வடிவேலுவின் கன்னத்தில் விஜயகாந்த் செல்லமாக தட்டியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நடிகர் தனுஷின் படிக்காதவன் படத்தில் வடிவேலு தான் நடித்து வந்து இருக்கிறார். 10 நாட்கள் ஷூட்டிங் என்ற ப்ளானில் படக்குழு ஹைதராபாத் சென்று இருக்கிறது. இங்கையும் தன் இஷ்டத்துக்கு நடிக்க தனுஷே டைரக்டர் சொல்படி கேளுங்களேன் என்றாராம். அதுக்கு இவர் மாமனாருக்கே நான் தான் சொல்லி தந்தேன். இவர் எனக்கு சொல்லி தரதா என சத்தமாக திட்டி பேசியதாக தகவல். மேலும், வில்லன் சுமனின் காலினை அமுக்குவது போல ஒரு சீன் இருக்க அதில் என்னால் நடிக்க முடியாது என அடம் பிடித்தவர். சொல்லாமல் கொள்ளாமல் இடத்தினை காலி செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டாராம். அதுக்கு அப்புறம் தனுஷும், வடிவேலுவுடன் இணைந்து நடிக்கவில்லை.

வடிவேலுவை வளர்த்து விட்டது விஜயகாந்த் ஆனால், முதலில் கேமராவில் அறிமுகப்படுத்தியது நடிகர் ராஜ் கீரன் அவருக்கு ஒரு பண சறுக்கல் ஏற்பட்டது. வடிவேலு ஒரு 5 லட்சம் கடன் கொடுத்தாராம் அதனை திருப்பி தருவதற்குள் சினிமாத்துறையில் உள்ளவர்களிடம் டமார் அடித்துள்ளாராம் இது ராஜ்கிரணுக்கு தெரியவர வளர்த்த கிடா மேல பாய்ந்து என்பது போல் சொல்லி ஆப் செய்தாராம். இதுபோல மாதவன், சுந்தர்சி, விஜயுடன் வடிவேலு ஒரு பிரச்சனை ஏற்படுத்தி இருக்கிறாராம்.