தற்பொழுது ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று சென்றால் அதற்கே பிரத்தியேகமாக இருக்கும் ஒரு கடைகளுக்கு சென்று வாங்குவது மக்களின் பழக்கமாகிவிட்டது என்றால் டிவி, வாஷிங் மெஷின் ஏசி ரெப்ரிஜிரேட்டட் ஹோம் தியேட்டர் மிக்ஸி கிரைண்டர் போன்ற எலக்ட்ரிக் சாதன பொருட்கள் வாங்குவதற்கு ஹோம் அப்ளையன்ஸ் என்றால் ஒரு தனி கடைகள் தற்பொழுது உள்ளது. இதேபோன்று ஆடை வாங்குவதற்கு என்று வழக்கமாக தனி கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது அதிலும் தற்பொழுது குறிப்பாக ஆண் பெண்ணின் இரு பாலருக்கும் தனித்தனி கடைகளும் சமீப காலத்தில் அதிகமாக திறக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தங்க நகையோடு வெள்ளியை சேர்க்காமல் வெள்ளிக்கென்று சிறப்பான தனிக்கடைகளும் தங்கத்திற்கும் சிறப்பான தனிக்கடைகளும் வைரத்திற்கும் தனிக்கடைகளும் அமைக்கப்பட்டிருப்பது பொதுவான ஒன்று! மேலும் மர சாமான்கள் வாங்குவதற்கும் சமையலுக்கு தேவையான மற்ற பொருட்கள் வாங்குவதற்கும் தனித்தனி ஷாப்கள் திறக்கப்பட்டுள்ளது அதற்கான வரவேற்புகளும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதைப் போன்று தனக்கு தேவையான பொருளை தானே தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு மனப்பான்மையும்! தான் தேர்வு செய்வதிலே தனக்கு விருப்பம் இருப்பதையும் அந்த முறையவே தன் வழக்கமாகக் கொண்டுள்ள அளவிற்கு இந்த கடைகளில் தனக்கு தேவையானவற்றை தானே தேர்வு செய்து கொள்ளும் முறையும் இருப்பது நுகர்வோரை கவர்கிறது.
இப்படி ஒவ்வொரு பொருள்களை வாங்குவதற்கும் சிறப்பான தனி கடைகள் இருக்கும் நிலையில் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் பிரத்தியேக கடைகள் இதுவரை திறக்கப்படாமல் இருந்தது. அதாவது பூஜை பொருள்கள் வாங்க வேண்டும் என்றால் பாத்திரங்கள் வாங்கும் கடைகளிலே விற்கப்பட்டது பூஜைக்கு தேவையான விபூதி குங்குமம் சந்தனம் போன்றவை வாங்க வேண்டும், அல்லது யாகத்திற்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் எந்த கோவில்களில் இது பிரத்தியேகமாக விற்கப்படுமோ அங்கு சென்று வாங்கும் நிலை இருந்தது அதாவது அந்தந்த கோவில்களில் பிரத்தியேகமாக உள்ளது பிரசாதங்களாக விற்கப்பட்டு வந்தது.
இதேபோன்று தெய்வீக அம்சம் கொண்டிருக்கும் கருங்காலி மாலை, புத்திரஜீவமணி மாலை, சங்கு மணிமாலை, பவள மணிமாலை, வைஜந்தி மாலை, ஸ்படிக மாலை, ருத்ராட்ச மாலை,. தாமரை மணிமாலை, முத்து மணி மாலை, சந்தன மாலை மற்றும் துளசி மாலை என பல வகையான மாலை பொருட்களும் வாங்குவதற்கு நுகர்வோர்கள் பல கடைகளாக ஏறி இறங்குவர் ஏனென்றால் இந்த வகையான மாலைகள் அனைத்தும் பல கடைகளில் போலிகள் விற்கப்படுகிறது, இதுதான் உண்மையான மாலை என்று தங்கள் மனதிற்கு தோன்றும் வரை பல கடைகளை சிலர் ஏறி இறங்கி வருகின்றனர்.
இப்படி இருந்து வரும் சூழலில் நுகர்வோரின் அனைத்து சிரமங்களையும் தவிர்ப்பதற்காக சென்னையை தலைமை இடமாகக் கொண்டுள்ள கிரி நிறுவனம் பாரத கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான இந்து வணிகவளாகம் என்ற வணிக வளாகத்தை தமிழகம் எங்கும் திறக்க ஏற்பாடு செய்துள்ளது. இங்கு சென்றால் வீட்டில் பூஜை செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்கள், இறைவனை துதிக்கவும் அணிந்து கொள்வதற்கும் பயன்படுத்தப்படும் ஸ்படிக மாலை, கருங்காலி மாலை மற்றும் துளசி மாலை போன்ற மாலை வகைகள், ருத்ராட்சங்கள், கையில் அணியப்படும் காப்பு போன்ற சனாதனத்தை பிரதிபலிக்கும் அடையாளங்கள் அனைத்தும் இங்கே கிடைக்கும் என தற்பொழுது தகவல்கள் கிடைத்துள்ளது. இது மட்டும் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டால் சனாதன தர்மத்தை கடைபிடிப்பவர்கள் உபயோகப்படுத்தும் விபூதி குங்குமம் போன்ற பொருட்கள் அனைத்தும் தரமாகவும் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.