24 special

தேர்தல் வரட்டும் என காத்திருக்கும் தூத்துக்குடி மக்கள்...! கலக்கத்தில் கனிமொழி...!

Kanimozhi
Kanimozhi

தூத்துக்குடி ராமநாதபுரம் மாவட்டங்களில் சரியான பருவமழை இல்லாத காரணத்தால் பயிர்கள் வறட்சியடைந்து காணப்படுகின்றது வடகிழக்கு பருவமழையை முழுமையாக நம்பி இருந்த விவசாயிகளுக்கு அது கை கொடுக்காததால் தென்மேற்கு பருவமழையாவது கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருந்தனர். 


ஆனால் தென்மேற்கு பருவமழையும் விவசாயிகள் நம்பிக்கையை கெடுக்கும் விதமாக அவ்வப்போது மட்டும் பெய்ததால் பயிர் நிலங்கள் வறட்சியடைந்து காணப்படுவதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

மேலும் கடும் வெயில் கொளுத்துவதால் அணைகள் மற்றும் குளங்களில் நீரில்லாமல் வறண்டு கிடைக்கிறது மேலும் கால்நடைகளுக்கு கூட அருந்துவதற்கு நீர் இல்லாத நிலை உருவாகி இருக்கிறது மேலும் திருச்செந்தூர் தூத்துக்குடி சாத்தங்குடி உள்ளிட்ட இடங்களில் தென்னை மரங்கள் மற்றும் பனை மரங்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது வறட்சியை கட்டுப்படுத்தி நிலத்தை தாங்கி நிற்கும் பனைமரம் கூட தற்போது கருகும் நிலைக்கு ஆளாக்கப்பட்டதால் விவசாயிகள் அதை நினைத்து மனம் வருந்தி  வருகின்றனர். 

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் எம்பி பதவியில் இருக்கும் கனிமொழி தண்ணீர் பிரச்சினை குறித்தும் நிலங்கள்  வறட்சியாக காணப்படுவதையும் கண்டுகொள்ளாமல் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவது தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதி மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் இது குறித்து சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு அமைப்பாளர் குணசீலன் கூறுகையில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் பனை மரத்திற்கே இந்த நிலை  ஏற்பட்டுள்ளதால் நிலத்தடி நீ எந்த அளவிற்கு சுரண்டப்படுகிறது என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று கூறினார் மேலும் உத்தன்குடி சாத்தான்குளம் முதலிய பகுதிகள் வறட்சியாக காணப்படுவதற்கு முக்கிய காரணம் தண்ணீர் பிரச்சனை தான் இதற்கு சரியான தீர்வு காண வேண்டும் என்றால் கடலில் கலக்கும் கழிவு நீரை முறையாக பிரித்து குளங்களில் சேகரித்து நிலத்தடி நீரை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் நிலத்தடி நீர் அதிகமாக சுரண்டப்பட்டதால் தான் தற்போது விவசாயிகளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது மேலும் இதற்கு வழிவகை செய்ய வேண்டிய அரசு மெத்தனமாக இருந்து வருவதை சுட்டிக்காட்டி பேசினார். 

இதுமட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை காப்பாற்றுவதற்கு டிராக்டர் மூலம் வெளியில் தண்ணீர் வாங்கி மரத்திற்கு ஊற்றி வரும் கொடுமையான நிலை தற்போது விவசாயிகள் அனுபவித்து வருகின்றனர். இதனால் தூத்துக்குடி மாவட்டமே பாலைவனமாக மாறி உள்ளது எனவே தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

அதேசமயம் தூத்துக்குடி மாவட்டத்தில் எம்பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டு விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் இருந்து வருகிறார் என தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய மக்கள் அனைவரும் கனிமொழி மீது மிகுந்த கோபத்தில் இருந்து வருகின்றனர்.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் எம்பியாக இருந்து கொண்டு தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என எம்பி கனிமொழி மீது விவசாயிகள் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில் இதையெல்லாம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமாக விவசாயிகள் திருப்பிக் கொடுக்க இருக்கிறார்கள் என கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன

ஏனெனில் தூத்துக்குடியில் மத்திய அரசு திட்டங்கள் எதுவுமே முறைப்படி எம்.பி'யான கனிமொழி அமல்படுத்தவில்லை எனவும், திமுக மற்றும் பாஜக அரசியலை மற்றுமே அவர் செய்துவருகிறார் எனவும் மக்கள் குமுறுகின்றனர். இதனால் வரும் தேர்தலில் கனிமொழி மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் நின்றால் பார்த்துக்கொள்ளலாம் எனவும் ஒட்டு கேட்டு கிராமங்களுக்கு வரட்டும் எனவும் மக்கள் கோபத்துடன் காத்திருப்பதாகவும் தென் மாவட்ட கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.