ஒரு படத்தின் ரீலிஸ் அரசு நிர்வாகத்தில் சுனக்கத்தை ஏற்படுத்தும் வரலாறு தமிழகத்தில் இருந்ததில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற உச்ச நட்சத்திரங்கள்முதலமைச்சராக இருந்தபோது கூட, இப்படி நடந்தது இல்லை. ஆனால் ரசிகர் மன்ற தலைவராக இருக்கும் ஒரு அமைச்சரின் துறையில்வரும் நாட்களில் பல்வேறு பூகம்பங்கள் வெடிக்க இருப்பதாக அலறத்தொடங்கி இருக்கிறது கோட்டைவட்டாரம். யார் அந்த அமைச்சர் என்ற கேள்வியுடன் கோட்டை வட்டாரத்தில் விசாரித்தோம்.இந்த முறை பிரச்சனை வரவிருக்கும்துறை கல்வித்துறை என குண்டை போட்டார்கள்நமது இன்ஃபாமர்கள் இருக்கும் துறைகளிலேயே அதிக பட்ஜெட் ஒதுக்கும்துறைகளுக்கு தான் மூத்த அரசியல் தலைகள் தங்களது தலைமையிடத்தில் கொக்கிபோடுவார்கள்.
அந்த வகையில்வருடத்துக்கு 40 ஆயிரம் கோடிக்கு அதிகமான பட்ஜெட்டை கொண்ட கல்வித்துறை,எந்த போட்டியும் இல்லாமல் வாங்கினார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. காரணம்அவர் அமைச்சர் பதவி வாங்கியது உதயநிதி கோட்டாவில் தான். அவர்உதயநிதி ரசிகர் மன்ற தலைவராகவும் இருக்கிறார். சமீபத்தில் வெளியான மாமன்னன்திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அனைத்து திரையரங்குகலிலும், அமைச்சர் அன்பில் மகேஷின் புகைப்படம் பேனர்களில் தவராமல் இடம்பிடித்தது. ஒரு மாநிலத்தில் அமைச்சராக இருப்பவர் இவ்வாறு ரகசிகர் மன்ற போஸ்டர்களில் இடம்பெறுவது, எந்த மாநிலத்திலும் நடக்காத ஒரு புதுவித சம்பவம் தான். ஆர்.எம்.வி மற்றும்எம்.ஜி.ஆர் காலத்தில் ஒருமுறை நடந்துள்ளது.
மகேஷ் துறையில் என்ன நடக்கிறது என்பதை டி.பி.ஐ. வட்டாரத்தில் விசாரித்தோம்.வண்டி வண்டியாக புகாரை கொட்டத்தொடங்கினார் சீனியர் அதிகாரிகள். குறிப்பாக 3 ஆயிரத்து 343 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லை என ஒரு குண்டை போட்டார்கள். எந்த ஆட்சியாக இருந்தாலும் அரசுப்பள்ளிகளில் இருக்கும் பிரச்சனைகுறித்து கொஞ்சம் கரிசனமாக நடந்துகொள்வார்கள். குறிப்பாக ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளிகளின் உட்கட்டமைப்புவசதி மேம்படுத்தப்பட வேண்டும் என பல முன்னெடுப்பைகளை செய்தார்.
அதை தாண்டி, ”வேலை செய்யலனா அந்த அம்மா நம்மல சும்மா விடாது” என்ற பயத்திலேயே ஓபி அடிக்கும் அதிகாரிகள், ஆசிரியர்கள் கூட ஒழுங்காக வேலை பார்த்தார்கள். ஆனால் தற்போதுஅப்படியான நிலைமை இல்லை என்றார் வருத்தத்துடன்..670 மேல்நிலைப்பள்ளி, 435 உயர்நிலைபள்ளி, 1003 நடுநிலை பள்ளி, 1235 தொடக்க பள்ளிஎன, தற்போதைக்கு இந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லை என்பதே பிரதான விமர்சனமாக வெடித்துகொண்டிருக்கிறது. தனியார் பள்ளிகள் போல அரசு பள்ளிகளின்நிர்வாக கட்டமைப்பு இல்லை. தலைமை ஆசிரியர் என்பவர் ஆசிரியர்கள், நிதி நிர்வாகம், பள்ளியின்சுகாதாரம், மாணவர்களின் பாதுகாப்பு என சகலத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆனால்தற்போது 3,343 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத, அந்த பள்ளிகளில் நிர்வாகத்தில்கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தலைமை ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால்அதே பள்ளிகளை சேர்ந்த மூத்த ஆசிரியர்கள், பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக நியமித்துஅவர்களின் பணிச்சுமையும் அதிகரிக்கும் சூழல் நடந்து வருகிறது. இது மாணவர்களின் கல்விசூழலை நேரடியாக பாதிக்கும் விவகாரமாக மாறும் என எச்சரிக்கிறார்கள் பள்ளிக்கல்வித்துறைசீனியர்கள்.
ஏற்கெனவே பல மலை கிராமங்களில் இருக்கும் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட இல்லாமல், வெறும்வார்டன் மூலமே கல்வி கற்பிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் ஒரு சில கிராமங்களில் உள்ளன. எல்லா புகார்களும் வானத்தைஅப்படியே வட்டமடித்துகொண்டிருக்க, அமைச்சரோ மாமன்னன் திரைப்படத்தின் போஸ்டர்கள் மட்டும்ஜொலித்துக்கொண்டிருக்கிறார் என குமுறுகிறார்கள் துறையின் சீனியர்கள். ரீல் மாமன்னனை விட்டுவிட்டு, அரசுபள்ளிகளில் அமைச்சர் கவனம் செலுத்தினால், பலரியல் மாமன்னர்கள் எதிர்காலத்தில் உருவாவார்கள்..