24 special

செந்தில் பாலாஜியின் வக்கிலுக்கு ஒரு நாளைக்கு இவ்வளவா...?ரகசியம் உடைந்தது...!

Senthil balaji
Senthil balaji

இலாகா இல்லாத அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை நீதிமன்றஇரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.குறிப்பாக நீதிபதி நிஷா பானு, செந்தில்பாலாஜியைவிடுதலை செய்யலாம் என தீர்ப்பு அளித்திருக்கிறார்.இன்னொரு, நீதிபதி பரத் சக்கரவத்தி, ஆட்கொணர்வு மனுவைதள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இரண்டு நீதிபதிகள்வழங்கிய மாறுபட்ட தீர்ப்பின் காரணமாக மூன்றாவது நீதிபதியின்விசாரணைக்கு அல்லது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுபக்கு இந்த வழக்கு செல்லவிருக்கிறது. ஏற்கெனவேஇதேபோன்ற ஒரு சூழல், சமீபத்தில் அதிமுகவில் நடந்த ஓபிஎஸ், இபிஎஸ் மோதலின்போதும் நடந்திருக்கிறது.இந்த வழக்கில் என்ன தான் நடக்கும், குறிப்பாக திமுகதரப்பு இந்த தீர்ப்பை எப்படி பார்க்கிறது என அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம்.


தற்போதைக்கு செந்தில்பாலாஜியை எப்படியாவதுஅமலாக்கத்துறையின் பிடியில் இருந்து மீட்டுவிட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இதற்காகதான் எங்களின் சட்ட அணியும் தீவிரமாக செயலாற்றி வருகிறது. இந்த மாறுபட்ட தீர்ப்பு என்பது எங்களுக்குகிடைத்த வெற்றி தான் என்றார் அறிவாலய வட்டார திமுக பிரமுகர். உச்சநீதிமன்றத்துக்குஅமலாக்கத்துறை சென்றாலும், அதை சந்திக்கவும்தயாராக இருக்கிறோம் என முடித்துக்கொண்டார்.


சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அமலாக்கத்துறைவட்டத்தில் பேசியபோது, இந்த தீர்ப்பு நாங்கள் எதிர்பார்த்தஒன்று தான் என கூலாக சொன்னார்கள். ஏற்கெனவே செந்தில்பாலாஜிமீதான வேலைவாங்கி தருவதாக லஞ்சம் வாங்கிய வழக்கைசமரசம் செய்து முடித்துவைத்ததே சென்னை உயர்நீதிமன்றம்தான். எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி வழக்கு தொடர்பான நிவாரணத்தை கோராமல் உச்சநீதிமன்றத்துக்கு நேரடியாக படியெடுத்தோம். ஆனால்உச்சநீதிமன்றமோ முதலில் நீங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தைநாடுங்கள் என சொல்லிவிட்டது. இதற்கு பிறகு தான்சென்னை உயர்நீதிமன்றத்திற்கே மீண்டும் வந்தோம்.தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியும்செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தாலும், கவலை இல்லை. நாங்கள் உச்சநீதிமன்றம் செல்வது உறுதி

உடல்நிலைசரியாகிவிட்டால், செந்தில்பாலாஜியை உடனடியாக கஸ்டடியில் எடுத்து விசாரிப்போம். குறைந்ததுஓராண்டு வரை செந்தில்பாலாஜி வெளியே வருவது கடினம் தான் என்றார். மேலும் தற்போது டெல்லிதுணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்குஏற்பட்ட நிலை தான் செந்தில்பாலாஜிக்கு ஏற்படும் என்றும்அழுத்தம் திருத்தமாக கூறினார்.  

செந்தில் பாலாஜிக்காக வாதாடும் வழக்கறிஞரின் பின்னணி பற்றி விசாரணையில் இறங்கிய போதுஅவர் ஒரு நாள் வழக்கு விசாரணைக்கு 22 லட்சம் ரூபாய் ஃபீஸ் வாங்கும் வழக்கறிஞர் முகுல் ரோத்கி என்று அறிந்து கொண்டது நம் டீம். முகுல் ரோத்கி இந்தியாவின் முன்னாள் அட்டார்னி ஜெனரலாகவும் இருந்தவர். அவர் சென்னைக்குவந்து ஒரு ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஆஜரானது இதுவே முதன்முறை.ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய்க்கு அசையும் சொத்தும், ஒரு கோடியே 58 லட்சம் ரூபாய்க்கு அசையா சொத்தும் வைத்திருக்கும் செந்தில்பாலாஜி 22 லட்சம் ரூபாய்யை ஒரு நாள் ஃபீஸாக வாங்கும் வழக்கறிஞரை, எப்படி வைத்துகொள்ள முடியும் என கேள்வி கொக்கியை நமக்கே போட்டு ரகசியம்உடைத்தார்கள்  தம்புசெட்டி சாலை கருஞ்சட்டைகள்.