24 special

யாரும் எதிர்பாராத வெற்றியை கொடுத்த மக்கள்....! திராவிட கட்சிக்கு ஆப்பு..!

mk stalin, edapadi
mk stalin, edapadi

4 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களை பாஜக தனி பெரும்பான்மையுடன் கைப்பற்றும் நிலை தற்போது உருவாகி இருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்து இருந்த திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறது பாஜக தேசிய தலைமை குறிப்பாக தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு  முக்கிய உத்தரவு ஒன்றை தேசிய தலைமை போட்டு இருப்பது இரண்டு திராவிட கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் 7ம் தேதி தொடங்கி நவம்பர் 30 வரை நடைபெற்றது.


இவற்றில் மிசோரம் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.ராஜஸ்தானில் 199 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகள், தெலுங்கானாவில் 119 தொகுதிகள் சத்தீஸ்கரில் 90 தொகுதிகள் என மொத்தம் 638 சட்டப்பேரவைத் தொகுதிகளில்  பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணியளவில் தொடங்கி  தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.கருத்து கணிப்புகளை பொய்யாக்கி தற்போது மிக பெரிய இந்தி பெல்ட் எனப்படும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களை பாஜக கைப்பற்றி இருக்கிறது தெலுங்கானா மாநிலத்தில் கடந்த முறை ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக தற்போது 15% வாக்குகளை கடந்து 8 இடங்களை கைப்பற்றும் நிலைக்கு சென்று இருக்கிறது.

இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தமிழகத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தேசிய தலைமை அதிரடி உத்தரவு ஒன்றை கொடுத்து இருக்கிறதாம். தமிழகத்தில் இனி சாமானிய மக்களின் துயரத்தை எடுத்து செல்லும் அதிரடி அரசியலை செய்யுங்கள்.மத்திய பிரதேசத்தில் தேர்தல் அறிவிக்கும் இரண்டு மாதத்திற்கு முன்னரே வேட்பாளர்களை  பாஜக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தது, எதிர் பார்த்தது போலவே மத்திய பிரதேசத்தில் இரண்டு மடங்கு அதிக இடங்களை கைப்பற்றி பாஜக மிக பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் போட்டியிட வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை தேர்வு செய்து ஒரு மாதத்திற்குள் தேசிய தலைமைக்கு அனுப்பவும், தமிழகத்தில் இதுவரை திமுகவை நேரடியாக எதிர்த்து அரசியல் செய்த நிலையில் அதிமுகவையும் நேரடியாக எதிர்த்து அரசியல் செய்யவும் தற்போது அனுமதி கொடுத்து இருக்கிறதாம் பாஜக தேசிய தலைமை.

மேலும் கூட்டணியை இரண்டு மாதங்களில் உறுதி செய்யவும் மூன்று மாதத்திக்குள் தேர்தலுக்கு தயாராகுவும் பாஜக தேசிய தலைமை தமிழக அரசிற்கு உத்தரவு போட்டு இருக்கிறதாம்.நடைபெற்ற 5 மாநில தேர்தல்களில் பாஜக பெரிய அளவு வெற்றியை பதிவு செய்யாது என திமுக அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளும் கணித்து இருந்த நிலையில் யாரும் எதிர் பாரத அளவு மிக பெரிய வெற்றியை பாஜக பதிவு செய்து இருப்பதுடன் உடனடியாக வேட்பாளர்களை தேர்வு செய்யவும் உத்தரவு வந்து இருப்பது திமுக அதிமுக என இரண்டு கட்சிகளையும் அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.