Cinema

சிவகுமார் குடும்பத்திற்கு மெசேஜ் பண்ண அமீர்....ஒரே கேள்வி தான் மொத்த குடும்பமும் கப்சிப்!

SIvakumar, Ameer
SIvakumar, Ameer

சமீபநாட்களாக இயக்குனர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும் இடையே பனிப்போர் தொடங்கி தமிழ் திரையுலகமே விமர்சித்து வந்தது சிவகுமார் குடும்பத்தையும் ஞானவேல் ராஜாவையும் இந்நிலையில் மன்னிப்பு கேட்காமல் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் ஞானவேல் ராஜா அதும் அந்த சர்ச்சையில் சிக்கியது. இந்நிலையில் இயக்குனர் அமீர் சிவகுமார் குடும்பத்திற்கு நாக்கை பிடுங்கும் அளவிற்கு ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார் அந்த கேள்விக்கு பதில் கூறாமல் மௌனம் காத்ததாக கூறப்படுகிறது.


நடிகர் சூர்யா சினிமாவில் தோல்வியில் இந்து மீட்க தயாரிப்பாளர் அமீரை நாடினார் சூர்யாவின் தந்தை சிவகுமார் அப்போது அமீர் ஓகே சொல்லி மௌனம் பேசியதே படத்தை இயக்கினார் அந்த படம் வசூல் ரீதியாக நானா வரவேற்பு பெறவில்லை என்றாலும் படம் செம ஹிட் அடித்தது சூர்யாவிற்கு நல்ல  கிடைத்தது. இதற்கிடையில் அமீர் அடுத்ததாக நடிகர் ஜீவாவை வைத்து ராம் படத்திற் இயக்கினார் அந்த படமும் ஹிட் அடித்ததே தவிர வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. 

அப்போது தான் சிவகுமார்  இரண்டாவது பையனுக்கு ஒரு வாய்ப்பு தேடி அமீரிடம் சென்றார். அமீரும் ஓகே சொல்ல கார்த்திக்கு பருத்திவீரன் என்ற படத்தை இயக்கி பெரும் வரவேற்பும் ஆர்த்தி சினிமாவால் கால் ஊன்ற அடித்தளமாக பருத்திவீரன் கை  கொடுத்தது. பருத்திவீரன் வெளியாகி 16 ஆண்டுகள் ஆன பின்னரும், அமீர் - ஞானவேல்ராஜா இடையேயான பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. சமீபத்தில் இந்தப் பிரச்சினை குறித்து பேட்டிக் கொடுத்த ஞானவேல்ராஜா, அமீரை திருடன் என தரக்குறைவாக பேசியிருந்தார். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததோடு திரையுலகிலேயே அமீருக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன.

இதற்கு திரை பிரபலம் சமுத்திரக்கனி, சசிகுமார், பாரதிராஜா, கஞ்சா கருப்பு போன்றோர்கள் அமீருக்கு ஆதரவாகவும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த விவகாரம் மக்களிடம் தெரியவர இப்படிப்பட்டவர்களா சிவகுமார் குடும்பம் எதற்காக சூர்யா, கார்த்தி போன்றோர்கள் வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகின்றனர் என கேள்வியை முன் வைத்தனர். அப்போது தான் சிவகுமார் விஷயம் பெரிதாகி விட்டது ஞானவேல் மன்னிப்பு கேட்டுவிட்டு என கூறியுள்ளார். ஆனால் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்காமல் அமீருக்கு நான் பேசியது தவறு தான் என வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்திற்கு நடிகர்கள் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தனர் மன்னிப்பு கேளுங்கள் இந்த வருத்தம் தெரிவிப்பதெல்லாம் வேணாம் என தெரிவித்தனர். 

இந்த சம்பவத்திற்கு சிவகுமார் குடும்பம் மௌனம் காத்து வந்த நிலையில், அமீர் ஸ்ட்ரைட்டா சிவகுமாருக்கு மெசேஜை தட்டியுள்ளார். அதாவது, "என் மகன் என்னை பார்த்து நீ திருடனா என கேட்கிறான். இதற்கு நான் என்ன பதில் சொல்லணும் அப்பா" என சிவகுமாரிடம் உருக்கமாகவும் உரிமையாகவும் கேட்டுள்ளார். இந்த மெசேஜை பார்த்த சிவகுமார் பதில் கூறாமல் கடந்து விட்டாராம். இதனால் அமீர் தனது மகனிடம்  என்ன சொல்வது என தெரியாமல் மிகவும் மனம் உடைந்துவிட்டாராம். எல்லாம் தெரிந்த சிவகுமார் எனது பஞ்சாயத்துக்கு வாயை திறந்தாள் எல்லாம் முடிந்துவிடும் என்றும் பருத்திவீரன் பஞ்சாயத்து முடிய சிவகுமார் குடும்பம் பேச வேண்டும் என அமீர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மாணவர்களுக்கு, விவசாயிகளுக்கு சமூக போராளியாக மாறி குரல் கொடுத்த கார்த்தி, சூர்யா தங்களால் ஏற்பட்ட பிரச்சனையால் தான் அமீர் பெயர் கேட்டு விட்டது இதனால் சமூக போராளிகள் எந்த ஆதாயத்திற்காக மௌனம் காக்கின்றனர் என சினிமா வட்டாரங்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.