பெரியார் சிலைக்கு தீவைத்த நபர் பிடிபட்டார் நாடகம் அம்பலம்!!
பெரியார் சிலைக்கு தீவைத்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பெரும்பாலானவை பொய் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரியை அடுத்த குப்பம் சாலையில், காட்டிநாயனப்பள்ளி பஞ்சாயத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. சமத்துவபுரத்தின் முகப்பில் பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை பெரியார் சிலைக்கு மர்மநபர்கள் ஆட்டோ டயரை மாலையாக அணிவித்து, தீவைத்து சென்றுள்ளனர்.
இதை பார்த்த அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், பெரியார் சிலை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மகாராஜாகடை போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பெரியார் சிலையை அவமதித்தவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேற்றய திருச்சி திமுக பொது கூட்டத்தில் கண்டனம் தெரிவித்தனர், மதவாதிகள் செயல் என இடத்துசாரிகளும், திராவிட கழகத்தினரும் மறைமுகமாக பாஜகவை குற்றம் சுமத்தினர்.
இந்தநிலையில் இன்று காலை பெரியார் சிலைக்கு தீ வைத்ததாக முருகவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார், குளிருக்கு ஆட்டோ டயரை கொழுத்தியதாகவும், அதை உயரத்தில் மாட்டிவைக்க அந்த சிலையை பயன்படுத்தியதாகவும் அவர் வாக்கு மூலம் கொடுத்துள்ளார், முருகவேல் உடன் நடத்திய விசாரணையை தொடர்ந்து போலீசார் அவர் எந்த கட்சியையும் சாராதவர் என தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் பெரியார் சிலைக்கு தீ வைத்த நபரை வைத்து இரண்டு நாட்களாக ஊடகங்களில் பலர் தெரிவித்த கருத்து பொய்த்து போனதுடன் தேர்தல் நேரத்தில் வதந்தி பரப்பியதும் அம்பலமாகியுள்ளது.