24 special

வேகமெடுக்கும் 2ஜி வழக்கு... ஆ.ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்?

rrasa , kanimozhi
rrasa , kanimozhi

மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக மூத்த திமுக தலைவர் ஆ.ராசா பதவி வகித்த போது 2ஜி அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டு ஏலத்தை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்போது பகிரங்க ஏலம் விடாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையை பின்பற்றினார். இதன் மூலம் நாட்டுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினார் ஆ.ராசா என்பது மத்திய கணக்கு தணிக்கைக் குழுவின் குற்றச்சாட்டு.


இந்த வழக்கில் 2011ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது,  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து 2018ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மேல் முறையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இந்த மாதம் 16ம் தேதி நடைபெற்ற விசாரணையில் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் எதிர்மனுதாரர்கள் சார்பில் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்  என உத்தரவிட்டு அக். 31-ம் தேதி வழக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காமல் ஊழலில் சிக்கி சிறையில் கிடக்கிறார், திமுக எம்பி ஜெகத்ரட்ச்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி எவ்வளவு வரிஏய்ப்பு செய்திருக்கிறார் என்று அறிக்கை மூலம் தெரிவித்தது. இந்நிலையில் முன்னதாக திமுக முக்கிய அமைச்சர்கள் மீதான வழக்குகளை மீண்டும் நீதிபதிகள் தானாக வந்து விசாரித்து வருகின்றனர். அதில் குறிப்பாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மீது வருமான வரித்துறை மற்றும் அமலாக்க துறை சோதனை நடத்தி குற்ற பத்திரிகை தாக்கல் செய்திருக்குறது எப்போது வேண்டுமானாலும் இவர்கள் கைது செய்யப்படலாம்.

இப்படி திமுக மீது சிக்கல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இன்னும் 5 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. இந்த நேரத்தில் திமுகவை சேர்ந்த கனிமொழி. ஆ. ராசா சிறை செல்லும் தருணம் ஏற்பட்டால் திமுகவிற்கு சரியான அடி மக்களிடம் இருந்து கிடைக்கும். ஏற்கனவே ஊழல் என்றால் அது திமுக என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆ.ராசாவுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை முடக்கியது குறிப்பிடத்தக்கது.இண்டியா கூட்டணியில் இருக்கும் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றால் கூட்டணியில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயர் கிடைக்கும் அதுமட்டும் இல்லாமல் துணை பிரதமர் பதவி கேட்கலாம் என்று எண்ணி மகளிர் மாநாடு எல்லாம் ஏற்பாடு செய்தனர். 

தற்போது பழைய வழக்குகளை விசாரிக்க ஆரம்பிப்பதால் திமுகவிற்கு அடி நிற்காமல் விழுந்து கொண்டு வருகிறது. இப்போது 2g  வழக்கு திரும்ப வந்த போது திமுக எம்பி ஆ.ராசா பொதுமேடையில் கலந்து கொள்ள வில்லை ஊடகத்திற்கும் சரியாக பதில் கூறாமல் தலையாமறைவாக சென்று வருகிறார். எம்பி கனிமொழி தற்போது உரிமை மாநாடு ஏற்பாடு செய்து தேசிய அளவில் திமுகவிற்கு பெயரை பெற்று கொடுத்து இருக்கிறார். 

நவம்பர் மாதம் இந்த 2g வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தால் திமுக முக்கிய புள்ளிகள் மீண்டும் கைது செய்யப்படலாம் மேலும் திமுகவிற்கு இருக்கிற கொஞ்ச நல்ல பெயரையும் இதன் மூலம் தலைகீழாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு கடைசி தேர்தல் என்று கூறப்படுகிறது.