கனல் கண்ணன் கைது செய்யப்பட்ட நிலையில் எதை எதிர் பார்த்து கனல் கண்ணன் கைதை ஆளும் கட்சியான திமுக விருப்பியதோ அது இறுதி நொடியில் அடிபட்டு போன சம்பவம் தற்போது கனல் கண்ணன் யார் என்பதை பொது வெளியில் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி இருப்பது கனல் கண்ணன் ஆதரவாளர்களை பெருமை அடைய செய்துள்ளது.
கனல் கண்ணன் மீது திமுகவை சேர்ந்தவர் கொடுத்த புகார் காரணமாக சாதி, மத ரீதியான சொற்களைப் பயன்படுத்துவது, பிரிவினையை ஏற்படுத்துவது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டரான கனல் கண்ணன், இந்து முன்னணி நிர்வாகியாகவும், பாஜக ஆதரவாளராகவும் செயல்பட்டு வருபவர். இவர் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட மதபோதகர் ஒருவர் பெண்ணுடன் சேர்ந்து நடனமாடும் விடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
மேலும் வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான்? மதம் மாறிய ஹிந்து மக்களே சிந்தியுங்கள்! என அந்தப் பதிவில் தனது கருத்தை ஆணி தரமாக குறிப்பிட்டிருந்தார்அவரின் இந்தப் பதிவு கிறிஸ்தவ மதத்தை அவமதிக்கும் செயல் என திமுகவைச் சேர்ந்த ஆஸ்டின் காவல் நிலையத்தில் புகாரளித்தார்
விசாரணைக்கு 15-ம் தேதி ஆஜராக வேண்டும் என காவல்துறை சம்மன் கொடுத்த நிலையில் நேற்றைய தினமே கனல் கண்ணன் விசாரணைக்கு ஆஜரானார் அப்போது பல மணி நேரம் கனல் கண்ணனை வேண்டும் என்றே சாப்பிட கூட விடாமல் காவல்துறையினர் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக இரு தரப்பிற்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.அப்போதே கனல் கண்ணன் உங்கள் கடமையை செய்யுங்கள் நான் பகிர்ந்த வீடியோ உண்மையில் சமூக வலைத்தளங்களில் வந்தது நான் உருவாக்கியது கிடையாது நான் எனது இந்து மதத்தை பற்றி விழிப்புணர்வு செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.
இந்துக்கள் இந்த நாட்டின் பூர்வ குடி மக்கள் என அழுத்தம் திருத்தமாக போலீஸ் விசாரணையில் கூறி இருக்கிறார். இதையடுத்து கனல் கண்ணனை விடுவதாக போலீஸ் தீர்மானித்த நிலையில் திடீர் என கனல் கண்ணனை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.இந்த நிலையில் உங்களை கைது செய்கிறோம் என கனல் கண்ணனிடம் போலீசார் தெரிவித்த நிலையில் எனக்கு நெஞ்சுவலி எல்லாம் இல்லை ஐயோ அம்மா காப்பாத்துங்க என கத்த மாட்டேன் வாருங்கள் போகலாம் என கனல் கண்ணன் கூறினாராம்.
உண்மையில் கனல் கண்ணனை கைது செய்ய சில நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் பிரதமர் மோடி செங்கோலை வணங்கும் போட்டோவை போட்டு தவறாக விமர்சனம் செய்தார். அப்போதே மனோ தங்கராஜை கனல் கண்ணனும் கடுமையாக விமர்சனம் செய்து பதிலடி கொடுத்து இருந்தார்.
இதனை மனதில் வைத்து கொண்டுதான் மனோ தங்கராஜ் கனல் கண்ணன் மீது இது போன்ற நடவடிக்கை எடுக்க பின்னால் இருந்து வேலை செய்வதாக இந்து முன்னணி அமைப்பினர் தெரிவிக்கின்றனர். கனல் கண்ணனை விசாரணை என்ற பெயரில் அவரை மிரட்டலாம் என நினைத்தார்கள் ஆனால் அவரோ கைது செய்யும் இறுதி நொடி வரை நான் இந்தியன் நான் ஒரு இந்து எனது மதத்தினருக்கு மதம் சார்ந்து விழிப்புணர்வு செய்வது மிக பெரிய பாக்கியம் கைது செய்தால் கைது செய்யுங்கள் என சிரித்த முகத்துடன் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றிய(add kanal kannan arrested van video ) போதும் கையை அசைத்து கொண்டே சென்று திராவிட மாடல் அரசை வெளுத்து எடுத்து விட்டார் என நடந்ததை கூறி பெருமை கொள்கின்றனர் கனல் கண்ணன் தரப்பை சேர்ந்தவர்கள்.