24 special

அமலாக்க துறையில் பிளான் A முடிந்தது ...!பிளான் B களம் இறங்கினால் என்ன ஆகும்

Senthil balaji
Senthil balaji

செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் தொடர்புடைய இடங்களில் 5 வது நாளாக நடைபெற்று வரும் வருமான வரித்துறை ரைடு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் செந்தில் பாலாஜி சகோதரருக்கு வருமான வரித்துறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருப்பதால் சோதனையில் அதிரடி திருப்பம் உண்டாகி இருக்கிறது.


கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள செந்தில் பாலாஜி சகோதரர்  அசோக் குமாருக்கு சொந்தமான அபெக்ஸ் இன்பக்ஸ் எனும் அலுவலகத்தில் இன்று காலை அதிரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.

இரண்டு கார்களில் வந்த ஆறு வருமான வரித்துறை அதிகாரிகள் அலுவலக ஊழியரை வரவழைத்து கதவை திறந்து உள்ளே சென்று, முன்பக்க கேட்டை இழுத்து பூட்டிவிட்டு சோதனை செய்தனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் பாதுகாப்பிற்கு அப்பகுதியில் 30 -க்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் இந்த நிலையில் சோதனையின் போது கிடைத்த ஆவணங்கள், சொத்து மதிப்பு விவரங்கள், பண பரிவர்த்தனை விவரங்கள் ஆகியவற்றிற்கு பணம் எங்கு இருந்து வந்தது, எந்த வருமானத்தின் அடிப்படையில் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டது என அனைத்திற்கும் முறையான கணக்கு காட்ட கூறி செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன் அனுப்பபட்டு இருக்கிறது.

இந்த முறை வழக்கமான வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை போன்று இல்லாமல் கரூர் கம்பெனி என சுருக்கமாக குறிப்பிடும்,  அனைவரது வீடு மற்றும் அலுவலங்களில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் சோதனை நடைபெற்று இருப்பதும், டாஸ்மாக் ஒப்பந்ததார்கள் தொடங்கி கோவையில் முக்கிய பிரமுகர் என பலரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மூலம் கைப்பற்றி இருக்கும் ஆவணங்களில் பல நூறு கோடி அளவிற்கு முதலீடுகள் வந்து இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறதாம்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மூலம் இதுவரை 66 முக்கிய புள்ளிகள் சிக்கி இருப்பதாகவும் இவர்களில் பலர் அப்ரூவராக மாறி இருப்பதால் வருமான வரித்துறை சோதனை சக்ஸஸ் எனவும் இன்னும் ஓரிரு நாளில் முழுமையான சோதனையில் கிடைத்த ஆவணங்கள் வெளியிடபடும் என்று கூறப்படுகிறது.

வருமான வரிதுறைக்கு குற்றவாளிகளை கைது செய்யும் அதிகாரம் இல்லாத நிலையில் அதற்கான சட்ட வரம்பிற்குள் உட்பட்டே வருமான வரித்துறை செயல்படும் சூழலில்,  வரும் நாட்களில் அமலாக்க துறை நேரடியாக வருமான வரித்துறை கொடுக்கும் ரிப்போர்ட் அடிப்படையில் களம் இறங்கினால் பல்வேறு நபர்களும் சிறை செல்ல வாய்ப்பு இருப்பதால் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேர வாய்ப்புகள் இருப்பதால் என்ன செய்வது என முழித்து வருகிறதாம் செந்தில் பாலாஜி தரப்பு.

வருமான வரித்துறை சோதனை எனும் பிளான் A நிறைவு அடையும் சூழலில் அமலாக்க துறை எனும் பிளான் B களம் இறங்கினால் என்ன ஆகும் என இப்போதே விழி பிதுங்க தொடங்கி இருக்கிறதாம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய வட்டாரங்கள்.