உதயநிதிக்கு சொந்தமாக இயங்கி வரும் நிறுவனம் ரெட் ஜெயண்ட், திமுக ஆட்சியில் அமைந்ததிலிருந்தே பல வெற்றி படங்களை இந்த நிறுவனம் தயாரித்தும், விநியோகித்தும் வருகிறது. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்கள், விக்ரம், துணிவு இது போன்ற படங்கள் எல்லாம் ரெட் ஜெயின் நிறுவனமே விநியோகம் செய்ததுதான்.
ஆனால் தற்போது இந்நிறுவனம் கடும் தோல்வியை சந்தித்து வருகிறது. இதற்கான காரணங்கள் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் முதலில் இந்த நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் அரசியல் விமர்சனத்தால் இந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார், அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையினரின் சோதனையும் நடைபெற்றது. இதற்கிடையில் வருமான வரி துறையினரின் அதிரடி சோதனைகள் தமிழகத்தில் தற்போது அதிகரித்துள்ள நிலையில் அதே வருமானவரித்துறை ரெய்டால் ரெட் ஜெயன்ட் மூவிசும் கடும் சரிவை சந்தித்திக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கருணாநிதியின் மற்றுமொரு பேரனான அருள்நிதி நடித்த கழுவேத்தி மூர்க்கன் படம் தமிழகத்தில் அனைத்து திரையரங்களின் வெளியானது. இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமே கிட்டத்தட்ட 310 திரையரங்களிலும் வெளியிட்டது.
பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகின்ற அருள்நிதி பல படங்களை நடித்துள்ளார் அவர் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்றாக கூறப்படுகிறது. அப்படி கனவாக இருந்த ஒரு படம் வெளியானது குறித்து மகிழ்ச்சியில் உள்ள பட குழுவிற்கு பாக்ஸ் ஆபிசில் எந்த ஒரு வரவேற்பும் பெறவில்லை. அதாவது இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெறும் என்று அப்பட குழுவினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அதற்கு தலைகீழான நிலைமையை ஏற்பட்டுள்ளது.
இப்படம் வெளியான முதல் நாளே இரண்டு கோடி வசூலை கூட பெறவில்லையாம், தற்போது விடுமுறை நாட்களில் இப்படம் வெளியாகி உள்ளது ஆனாலும் நாளுக்கு நாள் இப்படத்தில் வரவேற்பு இன்னும் குறைந்து கொண்டே செல்வதாகவே முன்னணி பட ரிவியூவேர்ஸ் கூறி வருகின்றன.
இந்த வாரங்களிலும் இந்த படம் சற்று வரவேற்பு பெறவில்லை என்றால் இனி அடுத்த வாரங்கள் இந்த படத்தின் வரவேற்பு இன்னும் குறைய தான் வாய்ப்பு உள்ளது என்று பட விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர், ஏனென்றால் ஆர்யா நடித்த காதர் பாட்சா, ஹிப் ஹாப் ஆதி நடித்த வீரன் போன்ற படங்கள் அடுத்த வாரங்களில் திரையரங்கில் வெளியாவதால் இந்த படத்தைப் பார்ப்பதற்கான வாய்ப்புகளும் முடிந்து போய் படங்கள் நேரம் கட்டப்பட்டு அடுத்த விழா காலங்களில் பொழுது டிவிகளில் வெளியாகும் என்று பல விமர்சனங்கள் இப்படத்திற்கு முன் வைக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் கதி அவ்வளவுதான் என்று கூறும் அளவிற்கு இந்த படத்தின் வசூல் அந்த நிறுவனத்தை முழுவதுமாக தாக்கியுள்ளது. மேலும் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத் துறையின் பார்வை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மீது தற்போது விழுந்திருப்பதால் இனி அந்த நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு வெற்றி படங்களையும் நம்மால் எதிர்பார்க்க முடியாது அதிக அளவிலான வசூல்களையும் பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது.
இனி வெளியிடும் படங்களின் விளம்பரங்கள் எதையும் இந்த நிறுவனம் இனிமேல் செய்யாது என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத் துறை உதயநிதிக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவிசை கண்காணிப்பதால் இந்த முடிவு எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு முதல் அடிதான், நிலைமை இப்படியே சென்றால் விரைவில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் திரையுலகை விட்டே விலகும் நிலை வரும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.