தமிழகத்தில் நாளுக்கு நாள் கட்டுமான பொருள்கள் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது என கட்டுமான துறையை சேர்ந்தவர்களும், புதிதாக வீடுகள் கட்டும் நபர்களும் கண்ணீர் விட்டு கதறிவருகின்றனர் ஆனால் அதுகுறித்து ஆளும்கட்சி கண்டு கொள்வது இல்லை என்ற குற்றசாட்டு அதிகரித்து வருகிறது.
மேலும் சிமெண்ட் விலை கடந்த அதிமுக ஆட்சியை காட்டிலும் திமுக ஆட்சியில் மிக பெரிய அளவில் உயர்ந்து உள்ளது என கட்டுமான துறையினர் புள்ளி விவரத்துடன் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர், இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பாஜக செய்தி தொடர்பாளர் குமரகுரு பதிவு ஒன்றை செய்துள்ளார் அதில்.,
மணல் ஜல்லி சிமெண்ட் செங்கல் rubbish M sand போன்ற கட்டுமான பொருட்கள் விலை 3 மடங்கு உயர்ந்து உள்ளன. 3 மடங்கு கொடுத்தாலும் பொருட்கள் கிடைப்பதில்லை. கட்டுமான நிறுவனங்கள் விழிபிதுங்கி நிற்கின்றன.இதுவே மத்திய அரசு விலை 1 ரூபாய் ஏத்தினால் வரும் பாருங்க கோபம்.
ஆனால் எதுவுமே நடக்காத மாதிரி நடுநிலை வாதிகளும் ஊடகங்களும் கம்யூனிஸ்டுகளும் தமிழ் போராளிகளும் அமைதியா இருக்காங்க பாருங்க அது தாங்க மதசார்பற்ற அரசியல், திராவிட அரசியல், பெரியார் பூமி, கலைஞர் மண் என நக்கலாக குறிப்பிட்டுள்ளார் குமரகுரு .
தமிழக ஊடகங்கள் தமிழ்நாட்டு அரசியலில் கவனம் செலுத்துவதை காட்டிலும் தேசிய கட்சியான பாஜக ஆளும் மாநிலங்களில் ஏதேனும் குற்றம் நடந்தால் மட்டுமே விவாதம் நடத்துகின்றன எனவும் தமிழகத்தில் விலை வாசி உயர்ந்தாலும் வாயை மூடி வேடிக்கை பார்ப்பதாக அடுக்கடுக்காக குற்றசாட்டுகள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.