24 special

தொடரும் காவல்துறை அராஜகம்... சேப்பாக்கத்தில் காவலர் செய்த செயல்!

annamalai
annamalai

உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் தொடங்கி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற்றபோது இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்கள் அவுட் ஆகி சென்றபோது ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.அதற்கு, தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்று கண்டனத்தை தெரிவித்தார். இதற்கு ஒருபக்கம் ஆதரவும், மறுபக்கம் எதிர்ப்பும் கிளம்பியது. அந்த வகையில் அமைச்சர் உதயநிதிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.


இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி நடக்கிறது. 11 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணி, சென்னையில் விளையாடுவதால் போட்டியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது.அந்த வகையில், மைதானத்திற்குள் கருப்பு உடை, இந்திய தேசியக் கொடி எடுத்துசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசியக் கொடியுடன் வந்த சில ரசிகர்களிடம் இருந்து போலீசார் தேசிய கொடியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்து போலீஸ் அதிகாரி குப்பைத்தொட்டியில் போட முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, அமைச்சர் உதயநிதி, இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பியதை குறிப்பிட்டார். கடந்த காலங்களில் பாகிஸ்தானில் நமது வீரர்களுக்கு நிகழ்ந்த சம்பவங்களை அவர் மறந்துவிட்டார். திமுக அமைச்சர் பொன்முடியின் மகனும், தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவருமான அசோக் சிகாமணி அரசியல் பிரசாரத்தை ஒரு படி மேலே கொண்டு சென்று இன்று நமது தேசத்தின் கொடியை அவமதித்துள்ளார். 

சேப்பாக்கத்தில் இன்றைய போட்டிக்கு இந்தியக் கொடியை ஏந்தியபடி சென்ற ரசிகர்களை மைதானத்திற்கு வெளியே போலீசார் அனுமதிக்கவில்லை. இந்த உரிமையை யார் கொடுத்தது? நமது தேசியக் கொடியை அவமதித்த போலீஸ் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் மாநில மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில், மூவர்ண கொடியின் புனிதத்தை இழிவுபடுத்தும் இந்த ஊழல் திமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவ்வாறு கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.