நடிகர் விஜயின் லியோ படம் வெளியாவதற்கு முன் ரசிகர்கள் ஜெயிலர் படத்தின் வசூலை நிச்சயம் முறியடிக்கும் என்று சமூக தளத்தில் சர்ச்சையை கிளப்பினர். இதற்கு நடிகர் மீசை ராஜேந்திரன் ஜெயிலர் பட வசூலை லியோ படம் முந்தினால் நான் மீசையை எடுத்து கொள்கிறேன் என்று கூறினார். இப்போது அதற்கு மாறாக பேச தொடங்கியுள்ளார்.லியோ படம் வெளியாவதற்கு முன் தான் பல சிக்கல்களை சந்தித்தது, படம் வெளியான பின்னும் அந்த சர்ச்சை ஓய்ந்த பாடு இல்லை.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாளிலேயே ஒட்டுமொத்த இந்திய படங்களின் இந்த ஆண்டு வசூலை முறியடித்து சாதனை படைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஆனால், அஜித், ரஜினி ரசிகர்கள் இந்த வசூல் எல்லாம் உருட்டு, படம் கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில், 400கோடி வசூலை எப்படி பெரும் நப்பும்படியாக சொல்லுங்கள் என தெரிவித்தனர். இதேபோல் மீசை ராஜேந்திரனும் அந்த வசூலை நம்பவில்லை என கூறியுள்ளார்.மீசை ராஜேந்திரன் முன்னதாக சொன்னதுபோல் படம் வசூலை தாண்டி விட்டது.
அதற்கு விஜயின் பெண் ரசிகை ஒருவர் மீசை ராஜேந்திரனின் மீசை எடுத்தால் வளர்ந்து விடும். அவரது கையை எடுக்க வேண்டும் என ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.இதனை கண்ட மீசை ராஜேந்திரன் அவர் மீது நான் எஃப்.ஐ.ஆர் போட்டால் அவர் தான் கோர்ட்டுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் அலைய வேண்டும் விஜய் ஒன்றும் வந்து காப்பாற்ற மாட்டார் என சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக கிளம்பிய ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த மீசை ராஜேந்திரன் மீசையை எடுக்க மாட்டேன் என மறுத்துள்ளார்.ஜெயிலர் வசூலை முந்தினால் தனது மீசையை எடுக்கிறேன் என சவால் விட்ட மீசை ராஜேந்திரன் தற்போது ரஜினியின் 2.0 வசூல் 800கோடியை தாண்டினால் பார்க்கலாம் என்று தனது போட்டியில் இருந்து பின் வாங்கியுள்ளார்.
இதனால் என்ன சார் மாத்தி மாத்தி பேசுறீங்க என்று சமூக தளத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.மேலும், லியோ படம் வெளியானதில் இருந்து தற்போது தியேட்டரின் ஸ்க்ரீன் குறைந்துள்ளது படம் நன்றாக இருந்தால் எப்படி ஸ்க்ரீன் குறையும், கர்நாடகாவில் முதல் நாள் 13 கோடி, அடுத்த நாள் 3 கோடிக்குள் தான். மூன்றாவது நாள் அதை விட குறைந்துள்ளது. இது தான் பல மாநிலங்களில் உண்மை சம்பவம். இப்படி பார்த்தால் 400 கோடியெல்லாம் படம் தொடாது எதோ ஒரு கணக்கை கட்ட வேண்டும் என்று இப்படி செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், நல்லா படங்கள் ஓடிக்கொண்டு இருந்தால் அடுத்த பட அறிவிப்பு வராது. ஆனால் லியோ படம் ரிலீஸாகி இருக்கும் நிலையில், இன்னும் சில நாட்களிலேயே தளபதி68 அப்டேட் வர இருக்கிறது. முதல் நாள் வசூலை வைத்து கணக்கு செய்ய கூடாது. கண்டிப்பாக மாறும். புதன்கிழமை தான் உண்மையே தெரிய வரும் என்றும் குறிப்பிட்டார்.நடிகர் விஜய்யே வந்து லியோ 800 கோடி வசூலை முந்தி விட்டது ராஜேந்திரன் என சொன்னால், என்னோட மீசையை எடுக்கிறேன் என தோல்வி பயத்தில் மாற்றி மாற்றி பேசி வருவதாக விஜய் ரசிகர்கள் மீசை ராஜேந்திரனை கலாய்க்க தொடங்கியுள்ளனர்.